வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். நவகிரகங்களின் கேது நிழல் கிரகமாகும்.
கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். தற்போது கேது பகவான் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2023 ஜூன் 26 ஆம் திகதி கேது பகவான் நட்சத்திர மாற்றம் நிகழவுள்ளது. அதாவது கேது சித்திரை நட்சத்திரத்திற்கு செல்லவிருக்கிறார்.
கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இக்காலத்தில் பல பிரச்சனைகளையும், சவால்களையும், சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.
இப்போது சித்திரை நட்சத்திரத்திற்கு கேது செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கும்.
தாயாரின் ஆரோக்கியம்
முக்கியமாக தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாயுடனான உறவு மோசமாகும் வாய்ப்புள்ளது. மன உளைச்சல் அதிகரிக்கும்.
சொத்து
இக்காலத்தில் எவ்வித சொத்து பரிவர்த்தனைகளையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். அதோடு ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
கேது நட்சத்திர பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
தந்தையுடன் தகராறு
தந்தையுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பணிபுரிபவர்கள்
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பல சிக்கல்களை சந்திக்கக்கூடும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் அதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வியாபாரம்
வியாபாரிகளுக்கு இக்காலகட்டம் சற்று சுமாராக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கேது நட்சத்திர பெயர்ச்சியானது சிரமங்களை சந்திக்க வைக்கும்.
ஆரோக்கிய பிரச்சனை
முக்கியமாக ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டும்.
முதலீடுகள்
இக்காலத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். அதே சமயம் பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
திருமணமானவர்கள்
திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது.