காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம்: திடீர் அற்புதங்கள் நிகழப்போவது யாருக்கு தெரியுமா..! இன்றைய பலன்கள்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 11 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி).

இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,.

மேஷம்
உங்கள் முயற்சிகளில் நீங்கள் விரும்பும் பலன் கிடைக்கும். இன்று எதிர்பாராத சில நன்மைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

இன்று நீங்கள் விரைவாகப் பணியாற்றுவீர்கள்.அதையும் எளிதாக ஆற்றுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்
இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மனதில் குழப்பம் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

பணியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்ற வேண்டும்

செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

மிதுனம்
உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் இலட்சியங்களை அடைய நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். வாழ்வில் வரும் மாற்றங்களை நடைமுறைப்படுத்த தைரியமாக இருங்கள்.

உங்களது தற்போதைய பணியில் திருப்தியின்மை காணப்படும். மேலும் உங்கள் வளர்ச்சிக்காக பணி மாற்றம் விரும்புவீர்கள்.

இன்று குறைந்த அளவு பண வரவே காணப்படும். அதிக பொறுப்புகள் காரணமாக அதிகமாக செலவு செய்ய நேரும்.

கடகம்
இன்று வாய்ப்புகள் நிறைந்து காணப்படும். என்றாலும் முடிவெடுக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் எளிதாக பணியாற்றுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். ஊக்கத்தொகையாக பண வரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இன்று பண வரவு திருப்திகரமாகவும் போதுமானதாகவும் இருக்கும்.

சிம்மம்
தகவல் பரிமாற்றங்களை கவனமாகக் கையாள வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டியது அவசியம். பொறுமையைக் கையாள வேண்டும்

சில பணிகள் குறித்த நேரத்தில் முடியாது. உங்கள் நேரத்தை பயனுள்ளதாக ஆக்க திறமை

நிதிநிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்காது. அதிக செலவினங்கள் காணப்படும்.

கன்னி
நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் சிறந்த வாய்ப்புகளை கடைசி நிமிடத்தில் இழப்பீர்கள். நாளைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள மிகுந்த முயற்சி தேவை.

தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் பணியில் அதிக கவனம் தேவை. பொறுப்புக்களின் காரணமாக இன்று பணிகளில் மும்மரமாக இருப்பீர்கள்.

நிதி நிலையில் சமநிலையைப் பராமரிப்பது இன்று கடினமாக உணர்வீர்கள்.

துலாம்
தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால் உங்கள் வளர்ச்சி குறையும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த இலட்சியத்தைக் கொள்ள வேண்டும்.

உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்காது. இது உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறந்த முறையில் பணியாற்றுங்கள்.

இன்று நிதி வளர்ச்சி காணப்படாது. செலவுகள் அதிகமாக காணப்படும்.

விருச்சிகம்
தைரியத்துடனும் உறுதியுடனும் முன்னேறுவீர்கள். இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.

பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் காணப்படும். உங்களுக்கு கொடுத்த வேலையை குறித்தநேரத்திற்குள் முடிப்பீர்கள்.

நிதிநிலைமை இன்று சிறப்பாக இருப்பதன் காரணமாக உங்களின் சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

தனுசு
இன்று அனுகூலமான நாள். நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். நாளை அதிர்ஷ்டம் காணப்படும்.

உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

உங்கள் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.

மகரம்
இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்காது. என்றாலும் உங்கள் கடின முயற்சி மூலம் உங்கள் திறமைகளை நிரூபிக்கலாம். தடைகளைக் கண்டு லட்சியத்திலிருந்து விலகாதீர்கள்.

பணியில் தவறுகள் நேரலாம். இதனால் உங்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகலாம். சிறிது கவனமுடன் இருக்கவும்.

இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். நிதிநிலைமையில் ஸ்திரத்தன்மை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

கும்பம்
சிக்கல்களில் சிக்காமல் இருக்க நாளை உங்கள் செயல்களில் பொறுமை தேவை. இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.

உங்கள் சக பணியாளர்களுடன் சில பிரச்சினைகள் ஏற்படும். இதனால் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தடைகள் இருக்கும்.

நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்
இன்றைய நாளின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நாளை நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

உங்கள் பணியில் திருப்தி கிடைக்கும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.