மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே. சூரிய பகவான் உங்கள் ராசியில் அமர்ந்திருக்கிறார்.
வெளிநாட்டு பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான உதவிகளை திரட்டுவீர்கள். வியாபாரத்திற்கு எதிராக இருந்த போட்டிகளை தகர்த்து எறிவீர்கள்.
சந்திரனின் சஞ்சாரங்கள் சாதக பாதகமான பலன்களை தந்தாலும் பொருளாதார ஏற்றத்தை கொண்டு வரும். செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் சிக்கல்களை கடந்து வெற்றி நடை போடுவீர்கள்.
இரு மடங்கு எச்சரிக்கை
புதன் முதல் இரண்டு ஆகிய ராசிகளில் இருக்கிறார். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.
படிப்புக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குரு 11ம் இடத்தில் இருக்கிறார். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வேலை இழக்கும் நிலை உருவாகும்.
அரசு ஊழியர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். சுக்கிரன் 3ம் இடத்தில் இருக்கிறார். பேசி வைத்த திருமணங்கள் தள்ளிப் போகலாம். கலைத்துறையினர் சில சிரமங்களை எதிர் நோக்குவார்கள்.
சனி 9ம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது இரு மடங்கு எச்சரிக்கை தேவை. விபத்துகள் ஏற்படலாம். ராகு 11ம் இடத்தில் இருக்கிறார். பெரிய மனிதர்களின் சந்திப்பால் தொழிலுக்கு தேவையான உதவிகளை பெறுவீர்கள்.
கேது 5ம் இடத்தில் இருக்கிறார். கோயில் காரியங்களுக்கு நிதி உதவி செய்வீர்கள். கோயில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே. சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார்.
உங்களுடைய பொதுநல போக்கால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். சந்திரன் இந்த வாரத்தில் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்துவார்.
மேலும் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகளை தருவார். செவ்வாய் 1ம் இடத்தில் இருக்கிறார். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் வார இறுதியில் நல்ல முடிவுக்கு வரும்.
பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். புதன் 11, 12ம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகள் அக்கறையாக படிப்பார்கள். வழக்கறிஞர்கள் வாதத் திறமையால் புகழ் பெறுவார்கள்.
கடன்களை அடைப்பீர்கள்
ஊழியர்கள் கணிசமான வருமானம் பார்ப்பார்கள். குரு 10ம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டு பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
வியாபாரம் சம்பந்தப்பட்ட நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும்.பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் முதல் வீட்டில் இருக்கிறார். குழந்தை செல்வம் இல்லாத குடும்பத்தில் அந்த பாக்கியம் சித்திக்கும்.
பெண்களால் ஆதாயம் கிடைக்கும். சனி எட்டாம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீர்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும்.
ராகு 10ம் இடத்தில் இருக்கிறார். நண்பர்கள் உதவியால் புதிய தொழில் தொடங்குவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். கேது நான்காம் இடத்தில் இருக்கிறார். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.