இன்று (27) மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி).
அஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, நவமி திதி.
அஸ்த நட்சத்திரம் என்றால் சந்திரனுடைய நட்சத்திரம். நவமி திதி என்றால் 9ஆவது திதி.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். உங்களை எதிர்க்க வரும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ பேச்சில் இனிமை தேவை. தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குறைகள் நீங்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எவரையும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடன்பிறப்புகளால் அவதிப்பட நேரலாம். தொழிலில் விருத்திக்கான புதிய ஒப்பந்தங்களை ஒப்புக் கொள்ள திட்டமிடுவீர்கள். நிம்மதி இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எதையும் காலத்தின் கையில் விட்டு விடுவது நல்லது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். வரவுக்கு மீறிய செலவுகளை செய்தால் பின் வருத்தப்பட வேண்டி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதையும் தெளிவான கண்ணோட்டத்துடன் உற்று நோக்குவது நல்லது. அலசி ஆராயாமல் முடிவெடுக்காதீர்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர தொழில் நெளிவு சுழிவுகளை திறம்பட கையாளுவது நல்லது. ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிகம் பொறுமை தேவை. அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். வீண் இழப்புகளை சந்திக்காமல் இருக்க முன் கோபத்தை தவிருங்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். புதிய விஷயங்களை கையாளும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதை தூய்மையுடன் வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தேவையற்ற விஷயங்களுக்கு நேரத்தை செலவிடாதீர்கள். பொருளாதாரம் படிப்படியாக உயரும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் தோன்றி மறையும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய படைப்பாற்றலை நீங்கள் வெளிப்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நேர்மறையான விமர்சனங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். முடிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் எதையும் செயல்படுத்துங்கள் வெற்றி உங்களுக்கு தான். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களில் ஈடுபடும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. தெரியாத வேலையில் மூக்கை நுழைத்து சிரமப்பட வேண்டாம். பங்குதாரர்களுடன் இருந்து வந்த முட்டல், மோதல் மறையும். தொலைதூர இடங்களுக்கு பிரயாணம் செல்லும் பொழுது பொறுப்புடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுதல் பொறுப்புகளை சுமக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தட்டி கழிக்காமல், தன்னம்பிக்கையுடன் செயல்படுத்துங்கள். வெளியூர் தொடர்பான விஷயங்களில் சாதக பலன்களை காணலாம். நட்பு வட்டம் சிலருக்கு விரிவடையும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்கப் போகிறது. எதையும் பெரிதாக போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களுடைய மூக்கை நுழைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அனாவசிய பேச்சு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். விட்டுக் கொடுப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களால் முடியாது என்று நினைத்தவர்கள் மத்தியில் நீங்கள் முடியும் என்று சாதித்து காட்டுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயத்தில் நீங்கள் சாதக பலன் காணலாம். சொத்து விவகாரங்களில் கூடுதல் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்து மறையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. மனதில் கருணை பிறக்கக்கூடிய அமைப்பு உண்டு. இறை வழிபாடுகளில் கூடுதல் நாட்டம் செலுத்துவீர்கள். செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து பின் வாங்காமல் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது. உடல்நல பாதிப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள்.