5ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? தலைகீழாக மாறப் போகும் வாழ்க்கை! உங்களின் இந்த குணங்களை யாராலும் மாற்ற முடியாது!

பொதுவாக வாழ்க்கையில் நமக்கான எண் எவ்வாறு வேலை செய்யப் போகிறது என்பதனை தெரிந்துக் கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும்.

நாம் பிறந்த நாளில் இருந்து நமக்கான எண் கணிக்கப்படுகின்றது. எப்படிக்கணித்தாலும் நம் வாழ்வில் நாம் சில கஷ்டம், சோதனைகள், சாதனைகள், இன்பம், வளர்ச்சி என்பவற்றைக் கடந்து தான் வரவேண்டும்.

இவை ஒரு இலக்கத்திற்கு மட்டுமல்ல 1 இலிருந்து 9 வரை இருக்கும் எண்களுக்கும் தான். அந்தவகையில் 5ஆம் எண்ணைக் கொண்டவர்களின் குணம் எப்படி இருக்கப் போகிறது என்றுப் பார்ப்போம்.

பொதுவாக 5ஆம் எண் புதன் பகவானின் நேச எண்ணாகும். இதில் 5, 14, 23 ஆகிய திகதியில் பிறந்தவர்களும் அடங்குவார்கள்.

  • 5ஆம் இலக்கத்தில் பிறந்தவர்கள் பின்னால் என்ன நடக்கும் என்பதை முன்னரே அறியக் கூடியவர்கள்.
  • இந்த எண்காரர்களை காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த என்றும் சொல்வார்கள்.
  • இவர்கள் மிகவும் அறிவு நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
  • வெளியில் வெகுளியாக இருந்தாலும் தங்கள் வேலை நடைபெற வேண்டும் என்று காரியவாதிகளாக இருப்பார்கள்.
  • எத்தனை தோல்வியை சந்தித்தாலும் வெற்றியை நோக்கி ஓடுவார்கள்.
  • வேடிக்கையாக பேசி அனைவரையும் கவருவார்கள்.
  • ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்தும் திறமை உடையவர்கள்.
  • இந்த எண்காரர்கள் கொஞ்சம் தசைப்பிடிப்பானவர்களாக இருப்பார்கள்.
  • கவர்ச்சியான முகத்தையும், கண்களையும் கொண்டவர்கள் தனது கருத்தை வெளிப்படுத்தும் போது கைகளாலும் பேசுவார்கள்.
  • எப்போதும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் புன்னகையும் கண்களில் காந்த சக்திகளையும் கொண்டவர்கள்.
  • குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்ததைப் போல நடந்துக் கொள்வார்கள்.
  • இவர்கள் எப்போதும் சுகபோகமாக வாழ விரும்புவார்கள்.
  • உடன் பிறந்தவர்களின் ஆதரவு திருப்தியளிக்கும்.
  • இவர்கள் சிறுவயதில் இருந்து காதல் வயப்படுவார்கள்
  • வாழ்த்துணையிடன் தன் எண்ணங்களுக்கு ஏற்றாற் போல் நடப்பார்கள்.
  • இவர்கள் காதல் சாகசங்கள் மோகம் அதிகமாக இருக்கும்
  • 5 அல்லது 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.