மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 5 ராசியினர்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்

இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 13 ஆம் நாள் புதன்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி).

சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, தசம திதி.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்தவற்றுக்கு சாதகமான பலன்களை பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்பு உண்டு. உங்கள் கடமைகளில் இருந்து பின்வாங்காதீர்கள். பொறுப்புடன் இருப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத விஷயங்கள் நடக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய ஏற்ற இறக்கங்களை கண்டு மனம் தளராதீர்கள். முக்கிய நபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கும். உதவி செய்கிறேன் என்று அலட்சியமாக இருந்து உபத்திரவம் செய்து விடாதீர்கள்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. திருமண பேச்சு வார்த்தைகளில் சமூகமான சூழ்நிலை நிலவும். புதிய முயற்சிகளை கையாளும் பொழுது நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். எதிர்பாராத பயணங்களில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களை மட்டம் தட்டியவர்கள் முன்பு மதிப்புடன் நிற்பீர்கள். அசையும் மற்றும் அசையா பொருட்களை விற்கும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. அரசு வழி காரியத்தில் பொறுமை தேவை.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. சிரித்து சிரித்தே சிலர் உங்களை மயக்க நினைப்பார்கள். இழந்த தன்னம்பிக்கையை ஒரு சிலர் திரும்பப் பெறுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வீர வசனங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் நல்ல நாளாக இருக்கிறது. நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு விஷயம் நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதில் சாதக பலன் பெறுவீர்கள். உடல் நலத்தை கவனியுங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் கவனம் இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். வெளியிடங்களில் பண ரீதியான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடன் பணி புரிபவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. முடியாது என்று நினைத்த காரியத்தை எளிதாக சாதித்து காட்டுவீர்கள். தெரியாத விஷயத்தில் காலை விடாதீர்கள். தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப அமைதிக்கு அனுசரித்து செல்லுங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்றதை சிந்திக்காதீர்கள். உங்களுடைய ஆற்றலை மற்றவர்களுக்காக செலவிடுவீர்கள். எதிர்பாராத லாபம் காணக்கூடிய யோகம் உண்டு. வரவுக்கு மீறிய செலவு செய்யாதீர்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கையில் பணம் அதிகம் புழங்கக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. ஆடம்பர பொருட்களை கையாளும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செயல்படுங்கள். புதிய நண்பர்களுடைய அறிமுகம் உற்சாகத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவை இல்லாமல் மற்றவர்களிடம் பகைமையை வளர்க்காதீர்கள். கூட்டாளிகளுடன் இருந்து வந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறையும். நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. நீண்ட நாள் எதிர்பார்த்து காத்து இருந்த ஒருவரை சந்திப்பீர்கள். தூக்கி எறிந்த பின்பு மீண்டும் தேடாதீர்கள். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் அக்கறை கொள்ளுங்கள்.