கேது பகவானின் வக்ர பெயர்ச்சி…. பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள் யார்? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

கேதுவின் வக்ர பெயர்ச்சி காரணமாக வாழ்க்கையில் வெற்றியையும் அதிர்ஷ்டத்தையும் பெறும் ராசிகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

கேது
ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படும். ராகு மற்றும் கேது ஒன்றரை வருடத்தில் பெயர்ச்சி ஆகின்றன.

அதிலும் இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போன்று முன்னோக்கி நகராமல் எப்பொழுதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும்.

இந்நிலையில் 2022ம் ஆண்டு துலாம் ராசிக்குள் நுழைந்த கேது 2023ம் அண்டு அக்டோபர் 3ம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகின்றார்.

நிழல் கிரகமாக இருக்கும் கேதுவின் இந்த மாற்றத்தின் போது, அந்த ராசியின் அதிபதி நல்ல பலன்களை அடைவதுடன், சில ராசிகளுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

கர்மா சார்ந்த கிரகமாக கருதப்படும் கேதுவின் இந்த வக்ர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை வெல்லும் ராசிகளைக் குறித்து இங்கு காணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியைப் பொறுத்தவரையில் 5ம் வீட்டிற்கு கேது செல்வதால் திடீர் பண ஆதாவத்தை பெறுவதுடன், ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மன அழுத்தத்தினால் அவதிப்பட்டு வருபவர்கள், இனி வரும் நாட்களில் மன அமைதியுடன் காணப்படுவார்கள். நிதி நிலையிலும் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும்.

சிம்மம்
கேது சிம்ம ராசியின் 2வது இடத்திற்கு செல்வதால், அற்புதமான பலன்களை வழங்குவதுடன், மற்றவர்களிடம் சிக்கிய பணம் தற்போது திரும்ப கிடைக்கும்.

லட்சியம், விருப்பம் நிறைவேறுவதுடன், செல்வாக்கும் அதிகரிக்கின்றது. மற்றவர்களை ஈர்க்கும் நிலையில் காணப்படும் உங்கள் பேச்சினால் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
கேதுவின் இந்த பெயர்ச்சி தனுசு ராசியில் 10வது வீட்டிற்கு செல்கின்றார். நல்ல பலன்களை வாரி வழங்குவதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியே கிடைக்கும்.

அலுவலக பணியாளர்களுக்கு நல்ல முன்னேற்றமும், வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் அடைவதுடன், புதிய வருமானத்தையும் ஈட்டலாம்.