12 வருடங்களுக்கு பின் நடக்கும் குரு பெயர்ச்சி! லாபம் பார்க்க போகும் மூன்று ராசிக்காரர்கள்; இன்றைய ராசி பலன்கள்

இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 14 ஆம் நாள் வியாழக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி).

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, ஏகாதசி திதி.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

இதேவேளை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த இடையூறுகள் நீங்கி நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. வேகத்தை காட்டிலும் விவேகம் நல்லது என்பதை புரிந்து கொள்வது நல்லது. புதிய முதலீடுகள் செய்யும் பொழுது சாதக பலன்களை காணலாம். சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையப் போகிற நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் இழந்த நம்பிக்கையை மீட்டு எடுப்பீர்கள். முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுங்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடக்கும். உறவினர்களால் உபத்திரவம் வரலாம்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து தடை இல்லாத பண வரவு இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. திட்டம் போட்ட காரியங்கள் வெற்றி அடைவது நிச்சயம். குடும்ப உறவினர்களுக்குள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மன பயம் நீங்க குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் காணக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நினைத்தது நடப்பதில் காலதாமதம் ஆகலாம். புதிய முதலீடுகள் செய்வதில் லாபம் அதிகரிக்கும். விட்டு சென்ற உறவு ஒன்று உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உண்டு. அரசு வழி காரியத்தில் அனுகூல பலன் கிட்டும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலோடு சில விஷயங்களை செய்து நற்பலன்களை அனுபவிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எடுக்க முடிவுகளை சட்டுபுட்டுன்னு எடுத்து விடுங்கள். புத்திசாலித்தனத்தால் உங்களுடைய எதிர்ப்புகளை முறியடித்துக் காட்டுவீர்கள். பயணங்கள் மூலம் உதவிகளை பெறலாம்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அறிவாற்றல் அதிகரித்து காணப்படும். உங்களுடைய சிந்தனை திறன் வலுவாகும் என்பதால் சமயோஜித புத்தியுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பற்று இருப்பதை கண்டு மனம் வருந்த கூடும். இழக்கும் நிலையில் இருக்கும் ஒன்றை மீட்டெடுத்து பத்திரப்படுத்துவீர்கள். பொருளாதாரம் ஏற்றும் காணும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற சினம் தேவையற்ற பிரச்சினைகளை உண்டு பண்ணும் அமைப்பாக இருக்கிறது. கடுமையான நெருக்கடியை கூட எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் அன்புக்கு உரியவர்களிடமிருந்து நல்ல செய்திகளை கேட்கக்கூடும். வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெரிய மனிதர்களுடைய சந்திப்பு நிகழக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் ரீதியான வளர்ச்சி சீராக இருக்கும். புதிய விஷயங்களை கற்று அனுபவிப்பீர்கள். கண்ணும் நடக்கும் அநியாயத்தை கண்டும் காணாமல் செல்லாதீர்கள், தட்டிக் கேளுங்கள். கடமையில் கண்ணியம் தேவை.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொதுநலத்துடன் செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். எதைப் பற்றியும் அதிகமாக சிந்தித்து மனதை அலைபாய விடாதீர்கள். சொத்து பிரச்சினைகளில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். சூழ்ச்சிகளால் உங்களை வெல்ல நினைத்தவர்கள் சோர்ந்து போவார்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் இரட்டிப்பாக கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. திருமண பேச்சு வார்த்தைகளில் தொடர்ந்து தடைகள் நீடிக்க வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. வம்பு, வழக்குகளில் இருந்து சாதகமான பலன்களை கேட்கக் கூடும். சாதுரியமாக செயல்பட்டால் எதையும் எளிதாக நிவர்த்தி செய்யலாம்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களுக்கு கடினமான வார்த்தைகளால் பிரச்சனை வரும் எனவே பேச்சில் இனிமையை கொண்டு வருவது நல்லது. வியாபார விருத்தி அடைய தொலைநோக்கு பார்வையுடன் சிந்திப்பது நல்லது. எதிர்பாராத பண வரவு உங்களை திக்கு முக்காட செய்து விடும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு செல்வாக்கு குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. சாதகமற்ற அமைப்பு என்பதால் கோபத்தை அடக்கி ஆளுங்கள். வாய் இருக்கிறது என்பதால் குடும்பத்தில் சண்டைகளை நீங்களே உருவாக்காதீர்கள். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவது இல்லை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் அமைப்பாக இருக்கிறது. ஆரோக்கியம் கவனம் வேண்டும்.