ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி).
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அனாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சிலர் மறதியால் அவதிப்பட நேரலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை நுணுக்கமாக கையாளுவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். ஆரோக்கியம் வலுப்பெறும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்க போகிறது. எதையும் எதற்கும் துணிச்சலுடன் இருப்பீர்கள். முன்பின் தெரியாதவர்களுடன் வீண் வம்பு, சண்டைகளை வளர்க்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய மரியாதைக்காக போராட வேண்டி இருக்கும். எவரிடமும் இறங்கி போகாதீர்கள். புதிய நண்பர்களுடன் அறிமுகம் ஏற்படலாம். பயணங்களின் பொழுது வாகன ரீதியான பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத மனக்குழப்பத்தை விரட்டி அடித்து விடுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உத்வேகத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள். விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். நீங்கள் நினைத்ததை அடைய கூடுதல் முயற்சி தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகள் பூர்த்தி அடையக்கூடிய இனிமையான நல்ல நாளாக இருக்கப் போகிறது. இதுவரை இருந்து வந்த இழுப்பறியான காரியங்கள் முடிவுக்கு வரும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி கிடைக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். தேவையற்ற இடங்களில் பொய் உரைக்காதீர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். உங்களை சுற்றி இருக்கும் எதிர்ப்புகள் அடங்கும். சுயநலம் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத வரவு எதிர்பார்த்ததை அடைய செய்யும். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சாந்தம் நிலவும். அழையா விருந்தாளியாக எங்கும் செல்லாதீர்கள். நினைத்த விஷயங்களை அடைவதில் காலதாமதம் ஆகலாம். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் காணும் யோகம் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் மிகுந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களை சுற்றியுள்ள பகைவர்களின் சூழ்ச்சிகளை எளிதாக முறியடிப்பீர்கள். சிலருக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உழைப்பால் உயர்வு கிட்டும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிறைவுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பது நல்லது. உழைப்பால் அசதி ஏற்படலாம். சுகவீனத்துடன் காணப்பட்டால் உடனே கவனியுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களை அறியாமல் நற்செயல்களை செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடாதீர்கள். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். ஆரோக்கியம் பேணுங்கள்.