ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
இதன்படி, இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 15 ஆம் நாள் சனிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
12 ராசிகளுக்குமான பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். பொறுமை கடலினும் பெரிது என்பதை உணர்வீர்கள். காலத்தின் கட்டாயத்தினால் சூழ்நிலை கைதியாக சில இடங்களில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டி இருக்கும். பொறுப்பற்ற வார்த்தைகளை உதிர்க்காதீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புத்துணர்வுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்க போகிறது. ஏதோ ஒரு தீய விஷயத்தில் இருந்து வெளியில் வர முயற்சி செய்வீர்கள். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறு சிறு குறைகள் மெல்ல மறையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வேண்டாம் என்று நினைத்த ஒன்று உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய நண்பர்களிடமிருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள். பயணங்களின் பொழுது கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பொருளாதாரம் ஏற்றம் காணும் என்பதால் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். சொந்த பந்தங்களுக்கு இடையே இருந்து வந்த மன கசப்புகள் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத விஷயம் ஒன்று நடக்கப் போகிறது. எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நீங்கள் நினைத்ததை அடைய நிதானத்தை கையாளுங்கள். சுற்றத்தார் முன்னிலையில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் வியாபாரி போல கராராக எந்த விஷயத்தையும் பேசாதீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முயற்சிக்கு நல்ல ஒரு லாபம் கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. செலவிற்கு ஏற்ப வரவுகளும் வந்து சேரும் என்பதால் கவலை தேவையில்லை. உடன் இருப்பவர்களுக்கு உதவிகளை செய்வது நல்லது. எல்லாவற்றையுமே தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் வாயை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற வார்த்தைகளால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் விருத்திக்கான புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விட்ட இடத்தில் இருந்து சில விஷயங்களை மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசைய சொத்துக்கள் வாங்குவதில் சாதக பலன் பெறலாம். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். ஆழமாக எதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. முன்பின் தெரியாதவர்களிடம் எல்லாவற்றையும் உளறி கொட்டாதீர்கள். உடன் இருப்பவர்களால் சில உபத்திரவங்கள் வரலாம். வெளியிடங்களில் தேவையில்லாத விமர்சனங்களுக்கு ஆளாகாதீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொலிவுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. விட்டது தொல்லை என்ற எண்ணம் மேலோங்கி காணப்படும். ஒன்று இழந்தால் தான் ஒன்றை பெற வேண்டி இருக்கும். அதீத சிந்தனை குழப்பத்தை ஏற்படுத்த கூடும். வரவுக்கு உள்ளேயே செலவு செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் மறையும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் காணலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த பகை மாறும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரித்து காணப்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அதிகம் புலம்பிக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. நினைத்தது நடப்பதில் இடையூறுகள் வரலாம் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. வீண் சந்தேகங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடைய வேலையை இழுத்துப் போட்டு செய்யாதீர்கள்.