நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், செல்வம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரனின் அருள் இருந்தால் தான் ஒருவரது நிதி நிலை சிறப்பாகவும், ஆடம்பர வாழ்க்கையையும் வாழ முடியும்.
சுக்கிரன் ராசியை மாற்ற 23 நாட்கள் ஆகும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சுக்கிரன் கடக ராசியில் இருந்து சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு ஜூலை 07 ஆம் திகதி செல்கிறார்.
சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் சிம்மம் செல்லும் சுக்கிரனால் 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதிய வாகனம் வாங்கலாம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களும் உருவாகலாம்.
ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
இக்காலத்தில் நிதி ரீதியாக மிகவும் செழிப்பாக இருப்பீர்கள். பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.
உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத பண வரவைப் பெறுவீர்கள்.
உங்களின் குணாதியங்களில் நல்ல மாற்றம் ஏற்படுவதோடு, மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.
உங்கள் சேமிப்பு இக்காலத்தில் அதிகரிக்கும். பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
உங்களின் பேச்சு இக்காலத்தில் மற்றவர்களை கவரும் வகையில் இனிமையாக இருக்கும்.