இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 17 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03 ஆம் திகதி).
மூலாய் நட்சத்திரம், தனுசு ராசி, பெளர்ணமி திதி.
இன்றையதினம் மூலாய் நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் ஒன்றாய் வருவதால் குல தெய்வ வேண்டுதல்களை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். கூட்டத்தில் ஒருவராக நிற்காமல் எதிலும் முனைப்புடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்பது பூர்த்தி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். பயணங்கள் மூலம் லாபகரமான பலன்களை அனுபவிக்க கூடும். எதிலும் நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. போட்டிகள் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துடிப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய நயமான பேச்சால் எதையும் சாதித்து காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே பேச்சில் இனிமை வேண்டும். புதிய விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு முன்பு யோசிப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பாதைகள் பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சில விஷயங்கள் உங்களை சோதிக்க கூடும் இருப்பினும் நீங்கள் பொறுமையை கைவிடாமல் இருப்பது நல்லது. மனக்கட்டுப்பாடு தேவை. எதிலும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தையில் தெளிவு உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பிறரின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் ஆடம்பரத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். குடும்ப ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து செய்வீர்கள். பிள்ளைகளின் நலன் குறித்த அக்கறை கூடுதலாக தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நண்பர்களுடைய யோசனையால் புதிய பாதைகள் பிறக்கும். தொலைதூர பயணம் வெற்றி தரும் அமைப்பாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க துடித்த ஒரு நபரை சந்திப்பீர்கள். கேட்டது கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயத்தில் ஜெயம் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன சண்டைகள் மறையும். பிள்ளைகளால் சில தொந்தரவுகள் வரக்கூடும். வெளியூர் பயணங்கள் அணுகூல பலன் தரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கூடுதல் உழைப்பை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கிறது. சிலர் சோர்வுடன் காணப்படுவீர்கள். பகை மறந்து சிலருடன் உறவாட வேண்டி இருக்கும். தகாத நண்பர்களின் சகவாசம் வம்பு வழக்குகளை பெற்று தரும் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. பயணங்களின் பொழுது எச்சரிக்கை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். பெற்றோர்களின் அனுமதி இன்றி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கிடைக்க வேண்டிய சலுகைகள் தகுந்த நேரத்தில் கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் எதையும் அலட்சியம் செய்யாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கூடுதல் அக்கறை தேவை. உங்களுடன் பணி புரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனக்குறைகள் நீங்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். பணம் சார்ந்த விஷயத்தில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். சுகாரிய பேச்சு வார்த்தையில் நல்ல செய்திகள் கிடைக்கும்.