இன்றய தொழிநுட்ப உலகில் அனைத்துமே இணையமாகி விட்டது. சமூக வலைத்தளங்களின் பாவனை இன்றி பச்சிளம் குழந்தையைக் கூட காண முடியாது.
இந்தநிலையில், இன்றைய நூற்றாண்டில் அசைக்க முடியா இடத்தை எட்டியிருக்கும் டுவிட்டர் நிறுவனமானது தற்போது புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
டுவிட்டரின் சேவையானது நீட்டிக்கப்பட்ட செயலிழப்பைச் சந்தித்து வருகிறது. இது டுவிட்டர் பயனர்களுக்கு புதிய இடுகைகளைக் கண்காணிக்கும் பயனர்களின் திறனைத் தடுக்கிறது.
பயன்பாட்டு ஒதுக்கீடு
இதன் காரணமாக டுவிட்டர் பயனர்கள் எத்தனை டுவீட்களைப் படிக்கலாம் என்பதற்கு வரம்புகளை வைத்து குறித்த இன்னலுக்கு ஒரு தீர்வை முன்வைத்துள்ளது.
இதன்படி தற்போது டுவிட்டர் பக்கத்தில் திருத்தப்பட்ட பயன்பாட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வரையறையானது சரிபார்க்கப்பட்ட, சரிபார்க்கப்படாத (verified & unverified) கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மற்றும் புதிதாக பதிவுசெய்யப்பட்ட, சரிபார்க்கப்படாத பயனர்கள் படிக்கக்கூடிய இடுகைகள் தொடர்பானது.
மாற்றம்
அந்தவகையில், சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் – 8000 இடுகைகளையும், சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் 800 இடுகைகளையும், புதிதாக பதிவுசெய்யப்பட்ட சரிபார்க்கப்படாத பயனர்கள் 400 இடுகைகளையும் மாத்திரம் தான் படிக்க முடியும்.
தற்போது இந்த வரையறையை மேலும் கடுமையாக குறைக்க வேண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் – 6000 இடுகைகளையும், சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் – 600 இடுகைகளையும், புதிதாக பதிவுசெய்யப்பட்ட, சரிபார்க்கப்படாத பயனர்கள் – 300 இடுகைகளையும் மாத்திரம் தான் படிக்க முடியும்.
பயனர்கள் படிக்க கூடிய இடுகைகளின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் – 10000 இடுகைகளையும், சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் – 1000 இடுகைகளையும், புதிதாக பதிவுசெய்யப்பட்ட, சரிபார்க்கப்படாத பயனர்கள் – 500 இடுகைகளையும் மாத்திரம் படிக்க முடியும்.