ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
இதன்படி, இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்மறையான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. எதுவும் என்னால் முடியும் என்கிற மன போக்கு நன்மை தரும். உற்றார், உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். உழைப்பால் முன்னேற கூடிய நாளாக இருக்கிறது. வேலையில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை அடையக்கூடிய பொன்னான நாளாக இருக்கப் போகிறது. கள்ளம், கபடம் இல்லாத உங்களுடைய பேச்சால் மற்றவர்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிர்பாராத பயணங்களின் மூலம் லாபம் அமையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உடலில் சோர்வுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து விடுவது நல்லது. எதிலும் அலட்சியம் வேண்டாம், பலருக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும். நீங்கள் சந்திக்கும் புதிய நபர்களிடத்தில் எச்சரிக்கை தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபச் செய்திகளை கேட்கக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் மெல்ல மறையும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். வியாபாரம் நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு முயற்சிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வீணான கனவுகளில் இருந்து வெளியில் வருவது நல்லது. சவால் நிறைந்த வேலைகளையும் எளிதாக சாதித்து காட்டுவீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சிகள் வெற்றி பெறக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். பழிவாங்கும் எண்ணத்தை கைவிடுவது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய விஷயங்களைப் பற்றி சிந்திப்பீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணும் வகையில் இருக்கும். பொறுமையை கையாளுவது நல்லது. அவசரப்பட்டு உங்களுடைய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிள்ளைகளின் எதிர்கால சிந்தனைகள் வலுவாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு காலதாமதம் ஆகலாம். எதிலும் நிதானத்தை கையாளுங்கள். பெற்றோர்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருக்கும். சேமிப்பு செலவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. திட்டமிட்ட காரியங்கள் எதுவும் சிதறாமல் சரியாக நடக்கும். பெரிய பொறுப்புகளை எவரிடமும் நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிந்தித்து செயல்படுவது நல்லது. தீர விசாரிக்காமல் எதையும் நிர்ணயம் செய்யாதீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. ஆச்சரியப்படும் அதிசயங்கள் நடக்கும். முன்பின் தெரியாதவர்கள் அறிமுகமாவார்கள். பயணங்கள் மன நிம்மதியை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவர்களால் மன கஷ்டம் வரக்கூடும் கவனம் வேண்டும். ஆரோக்கியம் சீராகி வரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் உங்கள் மனதில் இருப்பதை அப்படியே பேசி விடுவது நல்லது. செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் திட்டமிடுதல் அவசியமாக இருக்கும்.