மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 2 ராசியினர் – யாருக்கெல்லாம் மங்கல யோகம் தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் புதன்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி).

உத்தராட நட்சத்திரம், மகர ராசி, துவிதியை திதி.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் முன்னேற்றங்கள் இருக்கும். பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பொருளாதார நிலை உயரும். வெளியூர் பயணங்களால் நல்ல லாபங்கள் இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முயற்சிகளில் சற்று இழுபறிநிலை உண்டாகும். எதிர்பார்த்த பொருள் வரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் மனதில் குழப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு கூடுதல் பணி சுமை உண்டாகும். கொடுக்கல் – வாங்கல்களில் புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் தன லாபம் இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். நேரடி மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். வாழ்க்கை துணை உறவுகளால் ஆதாயம் இருக்கும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்களில் துணிந்து ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பல தடங்கல்களுக்கு பிறகு கடன் தொகை வந்து சேரும். விருந்து உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள். மக்கள் செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை அடைவார்கள்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். புதிய மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை. வெளிநாடு செல்லும் பயண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாலினத்தவர்களால் லாபம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினர் இன்றைய தினம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சகோதர வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். பழைய கடன்களை வட்டியுடன் அடைத்து முடிப்பீர்கள்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் மனக்கவலை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் இழுபறிநிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். சராசரியான பொருள் வரவு இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பண வரவிருக்கும். அதே நேரத்தில் சிலருக்கு செலவுகளும் அதிகரிக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். புதிய காரிய முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். வாராதிருந்த பணம் வட்டியுடன் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.