நம் வீட்டில் நல்ல சக்தி இருக்கிறதா? தீய சக்தி இருக்கிறதா? என்ற இந்தக் கேள்வி அனைவர் மனதிலும் இருக்கத் தான் செய்யும். அதை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வியும் எல்லோருக்குள்ளும் இருப்பது இயற்கை தான். அப்படியான சந்தேகங்களுக்கு ஒரு எளிய விளக்கமாக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் சில எளிய விளக்கங்கள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வேளை நம் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் அதை எப்படி எளிமையாக சரி செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் தீய சக்திகள் இருப்பதை தெரிந்து கொள்ள எந்த ஒரு வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுமாக இருக்கிறதோ, வீட்டிற்குள் நுழைந்தாலே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பரஸ்பரமாக பேசிக்கொள்ள முடியாமல் இருக்கிறதோ, அப்போது அந்த வீட்டில் தேவை இல்லாத சக்திகள் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது மட்டும் இன்றி வீட்டில் நீங்கள் எத்தனை பூஜை செய்தாலும் கூட எத்தனை வாசனை திரவியங்களை போட்டாலும் வீட்டில் ஒரு வித கெட்ட வாடைகள் வந்து கொண்டே இருக்கும். அதே போல் வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உடல் நலக் கோளாறு, எந்த ஒரு முயற்சியும் வெற்றியடையாமல் தோல்வியில் முடிவது, மனம் எப்பொழுதும் சோர்ந்தே இருப்பது முகம் வாட்டமடைந்து இருப்பதுடன், இளம் வயதாகவே இருந்தாலும் கண்களை சுற்றி கருவளையம், இளம் வயதில் முக சுருக்கம் எல்லாம் கூட கெட்ட சக்திகளின் தாக்கங்களாகவே சொல்லப்படுகிறது.
அதே போல் உங்கள் வீட்டில் பூஜை செய்ய நினைத்தால் செய்ய முடியாது கோவிலுக்கு செல்ல நினைத்தாலும் செல்ல முடியாது. நல்ல விஷயங்கள் காதுக்கு வராது இது போன்றவை எல்லாம் அந்த வீட்டில் கெட்ட சக்திகள் இருப்பதற்கான அறிகுறிகள் தான்.
அது கண் திருஷ்டியாக இருக்கலாம் அல்லது இறந்தவர்களுடைய ஆத்மாக்களாக இருக்கலாம். மாந்திரீக பிரச்சனையாகவும் இருக்கலாம். இதை முதலில் கண்டறிந்து சரி செய்து கொள்ள வேண்டும். வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உணர வீட்டிற்குள் நுழையும் போதே மனம் அமைதியாக இருக்கும்.
வெளியில் நாம் எவ்வளவு பிரச்சனையுடன் வீட்டிற்குள் வந்தாலும் மனம் லேசாகி விடும். அது மட்டும் இன்றி நாம் எந்த வித வாசனை திரவியங்களை பயன்படுத்தவே இல்லை என்றாலும் வீடு எப்போதும் ஒரு நறுமணத்துடனே இருக்கும். அந்த வீட்டிற்குள் வரும் செய்திகள் அனைத்தும் நல்லதாகவே இருக்கும்.
நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி அடையும் உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். இவற்றையெல்லாம் விட முக்கியமாக நம் வீட்டில் தெய்வம் இருப்பதை அறிந்து கொள்ள வீட்டில் விளக்கு ஏற்றும் போது எந்த காரணம் கொண்டும் விளக்கு கறுப்படையாது என்று சொல்லப்படுகிறது.
இப்படி ஆகாமல் இருந்தால் அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இப்படியான வீட்டில் வைக்கும் செடிகள் வாடி வதக்கி கருகாமல் நல்லபடியாக செழித்து வளரும்.
இவையெல்லாம் அந்த வீட்டில் நல்ல சக்தி தெய்வ சக்தி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் தீய நடமாட்டங்கள் இருப்பதை மேற் சொன்ன அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொண்டால் அதை என்னவென்று கண்டறிந்து சரி செய்து விடுங்கள்.
இதற்கு ஒரு எளிய பரிகாரமாக நாம் வீட்டில் எப்போதும் செவ்வாய், வெள்ளி இந்த இரண்டு தினங்களில் கட்டாயமாக சாம்பிராணி தூபம் போட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தூபத்தை தொடர்ந்து போடும் போது தேவையில்லாத கெட்ட சக்திகள் விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த சாம்பிராணி தூபம் போடும் போது அதில் கொஞ்சம் வெண்கடுகை சேர்த்து போடுவது மிகவும் நல்லது. அது மட்டும் இன்றி இந்த வாடைக்கு நிச்சயம் தெய்வ அனுகிரகமும் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.