இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 21 ஆம் நாள் வியாழக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி).
அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, திருதியை திதி.
மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
திருதியை திதி என்பது மூன்றாவது திதி. அவிட்ட நட்சத்திர காரர்கள் முருகப்பெருமானை வழிபடுவது ஏற்றத்தைக் கொடுக்கும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகள் படைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சமயோசித புத்தியால் நீங்கள் வெற்றிகளை குவிப்பீர்கள். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிட்டும். எவரிடமும் இன் முகத்துடன் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் நிறைவேற கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே வீண் விவாதங்களை வளர்த்துக் கொண்டே செல்லாதீர்கள். கணவன் மனைவியிடையே கூடுதல் அக்கறை தேவை. பொருளாதாரம் உயர புதிய யுத்திகள் கையாளுவது நல்லது.
மிதுனம்: மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். வாகன போக்குவரத்தில் கவனம் செலுத்துங்கள். வேண்டாத நண்பர்களை ஒதுக்கி வையுங்கள். எதிர்பார்த்த லாபத்தை காணக்கூடிய யோகம் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்களை எளிதாக கவரக்கூடிய இனிமையான அமைப்பாக இருக்கிறது. இறை சக்தி உங்களுக்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை வலுவாகும். வெளியிட பயணங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடும். ஆரோக்கியத்தில் அலட்சியம் காண்பிக்காதீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுக்கள் வாங்கக்கூடிய நல்ல நாளாக அமையப் போகிறது. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெற்றவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவது நல்லது. சுப காரியம் முயற்சிகளில் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். வரவேண்டிய பணம் கைக்கு வருவதில் காலதாமதம் ஆகலாம் எனவே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு இனிய நாளாக அமைய இருக்கிறது. காலையிலேயே சுபச் செய்திகளை கேட்கக்கூடும். பலதரப்பட்ட மனிதர்களிடமிருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள். வியாபார நோக்கத்தோடு செய்யும் பயணம் லாபம் தரும். பணத்தை கையாளும் போது விழிப்புணர்வு தேவை. உடல் நலத்தை கவனியுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவம் கை கொடுக்கும் வண்ணம் அமைய இருக்கிறது. எவரையும் மட்டம் தட்டி பேசாதீர்கள். மற்றவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை அமையும். துரு துருவென இருக்கும் பிள்ளைகளால் சில சங்கடங்கள் வந்து செல்லும். சோம்பல் தவிர்ப்பது வெற்றியை தரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மந்தமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். உற்றார் உறவினர்களின் மத்தியில் உங்களுடைய படைப்பாற்றல் வெளிப்படும். சமூக சிந்தனை உங்களுக்கு அதிகரிக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய புத்தி பிறக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிலும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள். வீட்டில் பெரியவர்களுடைய பேச்சுக்கு முன்னுரிமை கொடுங்கள். பூர்வ புண்ணிய பலன்கள் அனுபவிக்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டே இருக்கும். வாகன ரீதியான வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணம் தொடர்பான விஷயத்தில் சாதக பலன் காணப்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் புது உற்சாகம் பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நடக்குமா? என்று நினைத்த காரியம் ஒன்று நடக்கும். இழுப்பறியில் இருந்து வந்த நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும். யாரிடமும் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். உடல்நலம் தேறி வரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொட்டதெல்லாம் வெற்றியாகும் பொன் நாளாக இருக்கப் போகிறது. இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத திடீர் பயணங்கள் அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: கடன் என்னும் கடலில் சிக்கித் தவிப்பவர்களா நீங்கள்? மகிழ்ச்சியின் உச்சத்தை எட்ட, வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லையே இல்லாமல் வாழ இதை செய்தால் போதும்!