இன்றைய கால மக்களின் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது கடன் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். ஒரு மனிதன் எப்பேர்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும் கூட கடன் என்ற அரக்கனிடம் சிக்காமல் இருந்தாலே போதும் வாழ்க்கை சுமூகமாக மாறி விடும்.
பெரும்பாலும் வீடுகளில் பிரச்சனை உருவாகிறது என்றால் அது பணம் தொடர்பான விஷயமாகத் தான் இருக்கும். அதுவும் இந்த கடனினால் இருக்கும் பிரச்சனைகளை பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படி கடன் என்னும் கடலில் சிக்கித் தவிப்பவர்கள் இந்த எளிய முருகன் வழிபாட்டை செய்தால் கடன் தொல்லை இல்லாமல் வாழலாம்.
கடன் தீர முருகன் வழிபாடு இந்த வழிபாட்டை முருகருக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் செய்ய வேண்டும். பொதுவாக செவ்வாய்க்கிழமை என்றாலே அதில் புதிதாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக் கூடாது என்ற கருத்து இருக்கிறது.
ஆனால் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இந்த செவ்வாய்க்கிழமையில் கடன் அடைய இந்த வழிபாடு தொடங்கும் போது கடன் விரைவில் அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை காலையில் செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும்.
அதற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை காலையிலே சீக்கிரமாக எழுந்து முருகருக்கு மிகவும் பிடித்த விசேஷமான பச்சை பயறு, வெல்லம் சேர்த்த பாயாசத்தை செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும் போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை செய்து வைத்து வணங்கும் போது அதற்கான பலனும் விரைவில் கிடைக்கும்.
அந்த வகையில் இந்த பாயாசத்தை செய்து எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகர் ஆலயத்திற்கு சென்று அங்கு முருகர் பாதத்தில் இந்த பருப்பு பாயாசத்தை வைத்து வேண்டிய பிறகு, இந்த பாயாசத்தை கொடுத்து விடுங்கள் அல்லது உங்கள் கையாலே யாருக்கேனும் தானமாக தந்து விடலாம்.
இத்துடன் அந்த ஆலயத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து உங்களுடைய குறைகளை இறைவனிடத்தில் மனதார சொல்லி வழிபடுங்கள். இதில் கடன் அடைய வேண்டியதற்கான பிரதான வழிபாடாக இருந்தாலும், உங்கள் மனதில் இருக்கும் வேறு எந்த சுமைகளாக இருந்தது. அதை அவரிடத்தில் இறக்கி வைத்து விட்டு வந்து விடுங்கள்.
அதே போல் செவ்வாய்க்கிழமையில் பசு மாட்டிற்கு உங்கள் கைகளால் பாசிப்பருப்பு வெல்லம் கலந்த உணவு அல்லது பச்சைப் பயிரை ஊற வைத்து அதில் வெல்லம் கலந்து என ஏதாவது ஒரு வகையில் இந்த இரண்டையும் பசுமாட்டிற்கு தானமாக கொடுக்க வேண்டும்.
இந்த நெய்வேத்தியும் அதே சமயத்தில் கோமாதாவிற்கு செய்யும் இந்த தானமும் உங்களின் கடன் சுமையை பெரும் அளவு குறைப்பதற்கான வழியை காட்டும்.
நம்முடைய குறைகளை கேட்டு தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாக இருப்பவர் தான் இந்த கந்த கடவுளிடம் உங்களுடைய கடலளவு கடன் சுமையையும் இவரிடம் முறையிட்டு வேண்டினால் அது அடைவதற்கான வாய்ப்பினை உங்களுக்கு விரைவில் உருவாக்கித் தந்து வாழ்நாளில் கடன் என்ற சுமை இல்லாமல் உங்களை நிம்மதியாக வாழவும் வழி காட்டுவார்.