ஜோதிடத்தின் அடிப்படையான நவக் கிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் திகதி).
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அமைதி தரும் நல்ல நாளாக இருக்க போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே புதிய மாற்றங்கள் மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்களில் சாதகமற்ற பலன்கள் வரலாம். திறமையால் வெற்றி காணக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஏற்ற இறக்கமான பலன்கள் அனுபவிக்க கூடிய வாய்ப்பு உண்டு. எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏமாற்றம் வரலாம். உள் மனதில் புதிய சிந்தனைகள் உதிக்கும், நல்ல எண்ணங்கள் தோன்றும். எண்ணிய லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பகைவர்கள் இடத்திலும் கனிவு கொள்ளக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மாறும். புதிய நபர்களிடத்தில் சொந்த கதையை ஒப்பிக்காதீர்கள். கண் முன் தெரியும் அநியாயத்தை தட்டிக் கேட்காமல் செல்லாதீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய வாய்ப்புகளை பெறக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே கூடுதல் அக்கறை தேவை. சுப காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனம் புரிய மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிதல் அதிகரிக்கும். பகைவர்கள் இடத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்கள் உதவி கேட்டால் உடனே மறுக்காமல் யோசிப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ண ஓட்டங்களில் அலைபாயும் தன்மை இருக்கும். மனக்கட்டுப்பாடு தேவை. புதிய நண்பர்களுடைய அறிமுகம் உற்சாகத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனையை பெரிதாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எண்ணிய வேலையை விடாப்பிடியாக செய்து முடிக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் வந்து செல்லும் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். எதிர்பாராத அதிர்ஷ்டம் சிலருக்கு வரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கண்ணியமுடன் இருப்பது நல்லது. உங்கள் மீது நெருங்கியவர்கள் மதிப்பும், மரியாதையும் அதிகம் வைத்திருப்பதை உணருவீர்கள். பக்தி மார்க்கத்தின் பக்கம் மனம் திரும்ப வாய்ப்பு உண்டு. பொருளாதாரம் ஏற்றம் காணக்கூடிய வகையில் அமைப்பு இருக்கிறது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தடைகளை தாண்டி நீங்கள் முன்னேற கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுற்றி இருப்பவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதிய நண்பர்களுடன் இணக்கத்துடன் இருப்பது நல்லது. வீண் பகையை வளர்க்காதீர்கள், விட்டுக் கொடுங்கள். உங்களுக்கு எதிரான விமர்சனங்களை புறக்கணியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை காப்பது நல்லது. அலைச்சலால் டென்ஷன் காணப்படும். உடல் அசதியுடன் இருக்க வாய்ப்பு உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன்கள் பெறலாம். எண்ணிய எண்ணத்தை ஈடேற்ற போராட வேண்டி இருக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. சாலை பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்து உழைப்பில் நாட்டம் செலுத்துவது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓயாத உழைப்பால் சோர்வுடன் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவும். உற்றார், உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுப காரிய முயற்சிகளில் தொடர்ந்து மந்த நிலை காணப்படும்.