ஜோதிடத்தின் அடிப்படையான நவக் கிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் திகதி).
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். பொருளாதார ரீதியான சிக்கல்களை திறம்பட சமாளிப்பீர்கள். உபயோகமுள்ள விஷயத்தில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வு கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளது. பணத்தட்டுப்பாடு இருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீராத சிக்கல்களுக்கு விடை கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் எதிர்மறை பேச்சை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. அலட்சியம் செய்யாமல் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கண்கள் காண்பது பொய்யாக இருக்க வாய்ப்புகள் உண்டு தீர விசாரியுங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது புது அனுபவங்கள் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக உரையாடுவது நல்லது. மனதிற்கு பிடித்தவர்களால் சில மன சங்கடங்கள் வந்து செல்லும். சுபகாரியங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய விஸ்வரூப பலன்களை அனுபவிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் சாதக பலன்களை பெறுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தினால் பதற்றம் குறையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால் நிறைந்த வேலைகளையும் சுலபமாக செய்து காட்டக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. மனதில் தீவிரமாக நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். பிள்ளைகளிடத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. தேவையில்லாத வம்புகள் உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உண்டு. எதிலேயும் போய் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகளை தள்ளி போடுங்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தலைமை பண்பு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய அமைப்பாக உள்ளது. சுற்றி இருப்பவர்களுடைய முகத்திரையை கிழித்து எறிவீர்கள். முக்கிய இடங்களில் சமயோசித புத்தியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் முடிவெடுக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் தெளிவுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் ஆலோசனை நன்மை தரும் வகையில் அமையும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். வீண் செலவுகளை குறைப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன நிம்மதியுடன் இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சகோதர சகோதரிகளுடன் இணக்கம் ஏற்படும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் காணும் யோகம் உண்டு. எதிர்பார்த்த விஷயம் ஒன்று எதிர்பார்த்தபடி பூர்த்தி அடையும். உடல் நலத்தில் கவனம் வேண்டும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்காலம் பற்றிய சிந்தனையை தள்ளிப் போடுங்கள். வரவுக்கு ஏற்ப செலவுகளும் வந்து சேரும். முக்கிய பொருட்கள் வாங்குவதில் கஞ்சத்தனம் செய்யாதீர்கள். இழுத்துப் போட்டு வேலை செய்வதால் உடல் அசதியுடன் காண வாய்ப்பு உண்டு.