சனி வக்ர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

சனிபகவான் கும்பராசியில் சஞ்சரித்து வக்ர பெயர்ச்சி மேற்கொண்டு வருகிறார். வரும் நவம்பர் 4ம் தேதி மதியம் 12.45 வரை வக்ர பெயர்ச்சியில் இருக்கும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நல்ல பலனை வழங்க உள்ளார்.

இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம் –

ரிஷபம்
வக்ர பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வழங்க உள்ளார். வேலை செய்யும் இடத்தில் பல வாய்ப்புகளை வாரி வழங்கப்போகிறார். வருமானத்தையும் உயர்த்தப்போகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிசுமை குறையும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

துலாம்
வக்ர பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், துலாம் ராசிக்காரர்களுக்கு சில அற்புதங்களை செய்ய உள்ளார். இதனால், இவர்களுக்கு நல்ல செய்தி வீட்டை தேடி வரப்போகிறது. சொத்து, வீடு வாங்க வாய்ப்பு தேடி வருகிறது. மூதலீட்டில் நல்ல முன்னேற்றம் பெறப்போகிறீர்கள். எதிர்பார்த்த நல்ல பலன்கள் கைக்கூடும்.

மகரம்
வக்ர பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியைத் தாண்டி பல நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது. நிதிநிலைமை சீராக இருக்கும். பணிச்சுமை குறையும். உங்கள் செயல்களால் சாதனைபடைக்கப்போகிறீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.