இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 27 ஆம் திருநாள் புதன்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி).
பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தசமிதிதி. கன்னி ராசி, உத்தரம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றையபலன்கள்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு இனிய செயல்கள் செய்யக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. ஒரு சிலருக்கு புதிய பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டு. வரவுக்கு ஏற்ப செலவுகள் வந்தாலும் பொருளாதார ஏற்றம் காணும் வகையில் இருக்கும். எல்லா இடங்களிலும் வாக்குவாதம் செய்யாமல் மௌனம் காப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் நீங்கி மனம் இறுக்கத்திலிருந்து தளரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வெளியிடங்களில் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. முக்கிய நண்பர்களை சந்திப்பீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் எண்ண ஓட்டங்கள் தடுமாற்றத்துடன் காணப்படும் அமைப்பாக இருக்கிறது. முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுங்கள். நிதானம் உங்களுக்கு தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். முன் கோபத்தை தவிர்ப்பது உத்தமம். நல்வழி காட்டாத நண்பர்கள் என்று தெரிந்தால் விலகிக் கொள்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சொல் புத்தி தான் வேலைக்கு ஆகக் கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் சுயமாக சிந்திப்பது சில நேரங்களில் தவறாக போய் முடியலாம். நெருங்கியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாக கூடிய அமைப்பாக உள்ளது. ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைய கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். கணவன் மனைவி இடையே புது புரிதல் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களுக்காக வீண் செலவுகள் செய்யாதீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த வற்றுக்கு நேர்மாறாக நடக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. வருவது வரட்டும் என்கிற மனப்போக்கு நன்மை தரும். சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்கள் வார்த்தைகளில் கவனமுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காமல் நேர்மையை கையாளுவது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வந்து போகின்ற செலவுகள் பற்றிய சிந்தனை அதிகரித்து காணப்படும். எதையும் சமாளிக்கலாம் என்கிற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துவீர்கள். பயணங்களில் பாதுகாப்புடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் மௌனம் காப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கை தேவை. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அனாவசிய கோபங்களை வெளிப்படுத்தாதீர்கள். மன இறுக்கம் தளர யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது உத்தமம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காண கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனக்கவலைகள் நீங்கும். சகோதர பந்தத்தில் நிகழ்ச்சி உண்டாகும். பண தேவைகள் தடைகளைத் தாண்டி பூர்த்தியாகும். எதிலும் வெற்றி காணக்கூடிய அமைப்பாக இருப்பதால் துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். சுய கட்டுப்பாடு முக்கியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மை தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்தீர்கள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். எதிர்பார்த்த வருமான உயர்வு விஷயத்தில் சாதக பலன் கிட்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. மனதில் சரியென பட்டதை செய்யுங்கள் அதிலிருந்து பின்வாங்காதீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்த எண்ணங்கள் மேலோங்கும். எல்லாவற்றுக்குமே சிறிது நேரத்தை ஒதுக்குவது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய அமைப்பாக இருக்கப் போகிறது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். காலம் கடந்த சில விஷயங்களை பற்றிய எண்ணத்தை தவிர்க்க வேண்டும். முக்கிய நபர் ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இடம் அறிந்து செயல்படுவது உத்தமம்.