இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 28 ஆம் திருநாள் வியாழக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி).
திருதியை நட்சத்திரம், ரிஷச ராசி, ஏகாதசி திதி. துலாம் ராசி, சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிகரம் மிக்க செயல்களை செய்யக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணம் அமையும். பண வரவைக் காட்டிலும் விரயங்கள் அதிகரிக்கும் எனவே கவனமுடன் செலவு செய்வது நல்லது. நினைத்த வேலை தேடுபவர்களுக்கு அமையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மௌனம் காப்பது நன்மைகளை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையில்லாத வார்த்தைகளை உளறி கொட்டாதீர்கள். கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிலர் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வு தேவையான சமயத்தில் எடுப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அக்கறை அதிகம் தேவை. சுற்றி இருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை இனம் கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் பலிதமாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணக்கூடிய வகையில் இருக்க போகிறது. தொழில் விருத்தி ஏற்படுவதற்கு புதிய முயற்சிகள் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெரிய அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்த்து இணக்கமாக செல்வது உத்தமம். சிலர் வீண் பழியை சுமக்க நேரிடலாம் எனவே விழிப்புணர்வுடன் செயலாற்றுவது உத்தமம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்மறையான சிந்தனைகள் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். குடும்பத்தில் நடந்து வந்த சிறு சிறு பனிப்போர் மறையும். கல்வி விஷயத்தில் எடுக்கும் முடிவுகளில் கவனம் வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் ஒரு புது குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற சிந்தனைகளில் இருந்து மனதை ஒருமுகப்படுத்துவது நல்லது. பண விஷயத்தில் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். பயணங்களின் பொழுது விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விருப்பங்களுக்கு எதிராக சில விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே மனக்கசப்புகள் வந்து செல்லும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சலனம் இல்லாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். தேவையற்ற எதிர்பார்ப்புகளை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். பிள்ளைகளின் மீது அக்கறை கூடுதலாக தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கருணை பொங்கி வழியும். சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். வெளியிடங்களில் வீண் அலைச்சலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். உடன் பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். பழைய நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் புது நபர்களின் வரவு நன்மை தரக்கூடிய அமைப்பாக உள்ளது. தம்பதியர் இடையே இருக்கும் மன கசப்புகள் மாறும். நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உங்களுடைய முயற்சிக்கு வரும் எதிரான விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் சில சௌகரியங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு.