வரும் ஜூலை 23ம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். சிம்மத்தில் அப்படியே பின்னோக்கி சென்று ஆகஸ்ட் 7ம் தேதி கடக ராசிக்கு மாற இருக்கிறார்.
கடக ராசியில் செப்டம்பர் 4ம் தேதி நேர்மறையான பயணத்தை அவர் தொடங்குவார். இதனால், சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் யோகம் வரப்போகிறது என்று பார்ப்போம்.
கன்னி
வரும் ஜூலை 23ம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு சில மோசமான விளைவுகளை சந்திக்கப்போகிறீர்கள். உங்கள் உடல்நலனில் கவனம் வேண்டும்.
ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பணத்தை செலவு செய்வதில் பட்ஜெட் போடுங்கள். குடும்பத்தில் சில சில பிரச்சினைகள் ஏற்படும். அதனால் உங்கள் மரியாதை குறைய வாய்ப்பு உள்ளது.
மகரம்
வரும் ஜூலை 23ம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால், மகர ராசிக்காரர்களே சில எதிர்மறையான விளைவுகளை சந்திக்கப்போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் பேசும்போது கவனமாக பேசுங்கள். குடும்பத்தில் சில மனக்கசப்பு ஏற்படும்.
மீனம்
வரும் ஜூலை 23ம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால், மீன ராசிக்காரர்களே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இதனால் உங்கள் மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்களுடன் விரிசல் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிதிநிலைகளில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். செலவு செய்வதில் எச்சரிக்கை வேண்டும்.