பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர்! ஆனால் கடக ராசியினருக்கு? இன்பத்தில் மூழ்கப்போகும் 5 ராசியினர் – இன்றைய ராசிபலன்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 29 ஆம் நாள் வெள்ளிழக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி).

ரோகிணி நட்சத்திரம், ரிஷபராசி, துவாதசி திதி.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கண்களில் ஒரு பொலிவு காணப்படும். நல்ல ஒரு முடிவினை எடுத்துவிட்ட திருப்தி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் கிடைக்கக்கூடிய அனுபவம் உதவியாக இருக்கும். உங்கள் வேலையை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் ஒரு தெளிவு இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் தடைகள் வரலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடக் கூடிய வாய்ப்பு உண்டு.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொடர் தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். பயணங்களில் வேகத்தை காட்டிலும் விவேகம் கடைபிடிப்பது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உயர்வு உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனதில் இருந்து வந்த பலவீனம் நீங்கி தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெரியவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதீத அலைச்சல் உண்டாக கூடிய அமைப்பாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். உடல் சுகவீனமாக காணப்படும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தாண்டி முன்னேற்றம் இருக்கும். எதிலும் நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே அலட்சியம் வேண்டாம். மற்றவர்களை சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். பண விஷயத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. வரவுக்கு ஏற்ப செலவுகளும் வரும் எனவே ஆடம்பரங்களை தவிர்ப்பது உத்தமம். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இனம் புரியாத அச்சம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் அதன் போக்கில் விட்டு விடுங்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அக்கறையை மேம்படுத்துங்கள். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். பொறுமையுடன் இருந்தால் வெற்றி கிடைக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆக்கத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். இறை வழிபாடுகளில் கூடுதல் நாட்டம் செலுத்துவீர்கள். இடமாற்றம் ஏற்படுவதற்கு சில வாய்ப்பு உண்டு. வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சினம் தவிர்ப்பது உத்தமமான நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை வளர்க்காமல் மௌனம் காப்பது நல்லது. சொந்த பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எதிலும் தெளிவான சுய முடிவெடுப்பது உத்தமம். ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் களிப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் மெல்ல மறையும். செய்ய வேண்டிய செலவினை செய்து தான் ஆக வேண்டும். பல இடங்களில் உங்கள் தயக்கத்தை தகர்த்து எறிவது வெற்றியை தரும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும். மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. எதிர்பார்த்த பணத்தொகை கைக்கு வரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூல பலன் கிட்டும்.