ஒரு வருடத்தில் உள்ள மாதங்களிலேயே சிறப்பு பெற்ற மாதமாக ஆடி மாதம் விளங்குகின்றது. ஆடி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது எல்லாம் அம்மனின் சிறப்புகள் தான்.
ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம்.
மேலும் அம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பணசாமி உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் மாதமாக இருகின்றது எனலாம்.
ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
ஆடி பிறப்பு
ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு திதி, நட்சத்திரம் தான் சிறப்பாக இருக்கும். ஆனால் திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பாக இருப்பது இந்த ஆடி மாதத்தில் தான்.
ஆடி பிறப்பு, ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி தபசு, ஆடி பூரம் என ஆடி மாதம் முழுவதும் பக்தியால் பக்தர்கள் நிரம்பி இருப்பார்கள்.
இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த ஆடி பிறப்பானது 2023 ஆம் ஆண்டு ஜூலை 17 ம் திகதி திங்கட்கிழமை பிறக்கிறது. அதாவது ஜூலை 17 ம் திகதி தொடங்கி, ஆகஸ்ட் 17 ம் திகதி வரை ஆடி மாதம் இருக்கும்.
ஆடி மாதத்தின் முதல் நாள் வீட்டில் செய்யும் பூஜை
காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து, கோலமிட வேண்டும்.
சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
வாசலில் மாவிலை, வேப்பிலையால் தோரணம் கட்ட வேண்டும்.
அம்மனை வீட்டிற்கு வரவேற்கும் விதமாக சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் புது வஸ்திரம் வாங்கி ஒரு தட்டில் வைத்து, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம், தாலி சரடு, வளையல் போன்ற மங்கள பொருட்களை வைத்து அம்மனை வழிபட வேண்டும்.
இந்த மாதத்தில் கிடைக்கும் சிறப்பானது ஒவ்வொரு ராசியினருக்கும் நல்ல பலன்களையும் மந்தமான பலன்களையும் தரும்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமையை படைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடல் நலன் தேறி வரும். உங்கள் முன்கோபத்தால் சிலவற்றை இழப்பீர்கள். வேலையில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கும் வேதனைகள் தீரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்ப பொறுப்புகள் குறையும். சமூக அக்கறை தேவை. பொருளாதாரம் மேம்பட புதிய யுத்திகளை கையாளுங்கள். வாழ்க்கைத் துணையிடம் எதையும் மறைத்து வைக்காதீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவனமாக இருக்க கூடிய நாளாக இருக்கிறது. அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் வாக்குறுதிகளை அள்ளி கொட்டாதீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் பொழுது கவனம் தேவை. பணிகளில் புதிய சாதனைகளை படைப்பீர்கள். உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்கிற ஆதங்கத்துடன் இருப்பீர்கள். பழைய நினைவுகளால் சிலர் அவதி படலாம். முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருப்பீர்கள். உடன் இருப்பவர்களால் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். கணவன் மனைவிக்கு இடையே வீண் சந்தேகங்களை தவிர்ப்பது உத்தமம். பெரிய மனிதர்களின் சந்திப்பு தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். மருத்துவ ரீதியான செலவுகள் வரலாம் கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்வதை செய்துவிட்டு பின்னர் வருத்தப்படுவீர்கள். கோபத்தை குறைப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அனாவசிய வாக்குவாதங்களை தவிருங்கள். புதிய வரவு உங்களை உற்சாகப்படுத்தும். பணியில் வேலையை சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிடிக்காத இடத்திலிருந்து விலகி செல்லுங்கள். சுறுசுறுப்புடன் இருக்க மனதை ஒருமுகப்படுத்துவது நல்லது. உடல்நலம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் குறை கண்டு கொண்டே இருக்காதீர்கள். எல்லோரும் உங்களைப் போலவே இருக்க மாட்டார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த இடியாப்ப சிக்கல் தீர்வுக்கு வரும். தகுந்த சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பயணங்களினால் அலைச்சலை சந்திக்க வாய்ப்பு உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நல்ல நாளாக அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள். வீணான கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். நீங்கள் எண்ணியது எண்ணியபடி ஈடேறும் வாய்ப்பு உண்டு. பொது இடங்களில் அந்தஸ்து உயரும். வீட்டு கடமைகளை புறக்கணிக்காதீர்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத் தேவைகள் பூர்த்தியாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். பிள்ளைகளினால் மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் காண வாய்ப்பு உண்டு. சேமித்த பணத்தை சரியான முதலீடு செய்வது நல்லது. புதிய சிந்தனைகள் உதிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களை மட்டும் தட்டியவர்கள் முன்பு சாதித்து காட்டுவீர்கள். பகைவர்களும் நண்பர்களாக மாற வாய்ப்புகள் உருவாகும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணி சார்ந்த ரகசியங்களில் விழிப்புணர்வு தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையை சோதிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் மன கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடக்காமல் நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.