ஜீலை மாதத்தில் வரும் புதன் பெயர்ச்சி! மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள்! யார் யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இன்றைய ராசி பலன்கள்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 30 ஆம் நாள் சனிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி).

மிருகசீரிட நட்சத்திரம், ரிஷப ராசி, திரியோதசி திதி.

துலாம் ராசி – சித்திரை நட்சத்திர காரர்களுக்கு நாளை சந்திராஷ்டமம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்கள் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதக பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்க திட்டமிட்டு செயல்படுங்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேகம் விட விவேகம் காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே எதையும் மறைக்காதீர்கள். வெளியிட பயணங்களில் பொழுது வேண்டாத நபர்களை பற்றி பேச்சு கொடுக்காதீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் சுயமாக முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். வீண் வம்பு, வழக்குகள் உங்களை தேடி வரலாம் விழிப்புணர்வுடன் இருப்பது உத்தமம். கடமையிலிருந்து நழுவி கொள்ளாமல் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல செய்திகளை பெறுவதற்கு உரிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீண்ட நாள் காத்திருந்த விஷயம் நடக்கும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வந்து மறையும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளை குறைப்பது உத்தமம்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் வழங்குவார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். எதிர்தரப்பினரின் பேச்சுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. எவரையும் குறைவாக எடை போடாதீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நேர்மையை கையாளுவது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே அனுசரித்து செல்லுங்கள். நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனமுடன் இருப்பது நல்லது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே தேவையில்லாத எதிர்பார்ப்புகளை குறையுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமயோசித புத்தியுடன் செயல்படுவது நல்லது. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். நம்பிய ஒருவர் ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உண்டு. கண்ணா பின்னாவென்று செலவு செய்யாதீர்கள் பின் வருத்தப்படுவீர்கள். ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் நீங்கி வெற்றிக்கான பொறுமையை கையாளுவது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மன சங்கடங்கள் நீங்கும். ஒற்றுமையுடன் இருக்க திட்டம் தீட்டுங்கள். நன்மை நினைத்தால் நன்மை நடக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வீண் வாதங்கள் வேண்டாம்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைசல் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. எதிர்பாராத பயணங்களில் மூலம் அனுகூலமான பலன்கள் பெறலாம். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். ஒரு முடிவினை எடுத்த பின்பு அதைப் பற்றிய சிந்தனையை தவிர்ப்பது நல்லது.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். காலம் உங்களுக்கு புதிய அனுபவங்களை கற்றுக் கொடுக்கும் அமைப்பாக உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களில் சாதக பலன்கள் கிட்டும். ஆரோக்கியத்தில் அலட்சியம் செய்யாதீர்கள்.