தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 31 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி).

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சதுர்த்தசி திதி. தேய்பிறை.

விருச்சிக ராசி – அனுசம் நட்சத்திர காரர்களுக்கு நாளை சந்திராஷ்டமம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றையபலன்கள்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வுடன் காணப்படுவீர்கள். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. பணியில் உள்ளவர்கள் அலட்சியமாக இருக்காதீர்கள் அவமானப்பட நேரிடும். குடும்பத்தில் வரட்டு கௌரவத்தை விடுத்து இறங்கி செல்வது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுப காரியங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. மற்றவர்களின் பேச்சை கேட்டு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். மனதில் இருக்கும் இனம் புரியாத பயம் விலகும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிம்மதியான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் குதூகலத்துடன் கடக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வழக்குகளில் சாதகப் பலன் பெறலாம். புதிய முதலீடுகள் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பயணங்களில் அனுபவங்கள் கிடைக்கக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். தடையில்லாத முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள், கெட்டுப் போக மாட்டீர்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெருமூச்சு விடக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நினைத்ததை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல காட்டிக் கொள்ளாதீர்கள். திறமைக்கு உரிய மதிப்பு கிடைக்க விடாமுயற்சி தேவை.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுக எதிர்ப்புகள் முறியடிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பகைவர்களின் பேச்சில் ஆவேசப்படாதீர்கள். வெளியிடங்களில் சட்டத்தை மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு இருக்கும் இடத்தை புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இறைவழிபாடு நிம்மதி தரும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த காரியத்தை சுணக்கமின்றி முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே கூடுதல் அக்கறை செலுத்துவது அன்னோன்யத்தை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியான சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சீரான வளர்ச்சியை நோக்கி பயணித்தீர்கள். ஆடம்பர செலவுகளினால் அலைச்சலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து எதிர்ப்புகளை சம்பாதிக்காதீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமையை பலப்படுத்தும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செல்வாக்கு உயரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் வந்து மறையும். திட்டமிட்டு செயல்பட்டால் நேர விரயத்தை மிச்ச படுத்தலாம்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய விஷயங்களை அனுபவம் உள்ளவர்களுடைய ஆலோசனையை பெறுவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். தேடி சென்ற நபரை சந்திக்க முடியாமல் போகும் வாய்ப்பு உண்டு. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் சாதக பலன் தரும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. வெளியிடங்களில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகத்தை தரும். கணக்கு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. பெரியவர்களிடத்தில் மரியாதை குறைவாக நடந்து கொள்ளாதீர்கள். வீண் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது உத்தமம். பயனுள்ள செயல்களில் மனதை செலுத்துங்கள். பண விவகாரத்தில் வலிய சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.