இன்றைய தினமானது சிறப்பான ஒரு தினமாக இருக்கிறது. பொதுவாக சூரியனும் சந்திரனும் இணைந்தால் அந்த நாள் தான் அமாவாசை தினமாகும்.
மேலும், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறது. அதில் ஆடி மாதத்தில் முதல் நாள் ஆடி 1 ஆம் திகதி அதாவது ஜூலை 17 இன்று முதல் அமாவாசை வருகிறது அதுபோல ஆடி 31 ஆம் திகதி அதாவது ஆகஸ்ட் -16 அன்று இரண்டாவது அமாவாசை வருகிறது
இந்த ஆடி அமாவாசை தினத்தில் இந்த விடயங்களை எல்லாம் செய்யலாம், செய்யகூடாது என்று பல விடயங்கள் இருக்கிறது அவற்றுள்,
ஆடி அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை
- அமாவாசை நாளில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை போல வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்
- அமாவாசை நாளில் வீட்டு வாசலில் கோலம் போடவே கூடாது இவ்வாறு கோலம் போடுவதால் இறந்தவர்களுக்கு சில அதிர்வலைகளை ஏற்படுத்துமாம் அதனால் வாசலில் கோலம் போடுதல் நல்லது அல்ல என்று சொல்கிறார்கள்
- இந்த நாளில் மிகவும் கடினமான புதிய முயற்சிகளை செய்யக் கூடாது
- உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலும் ஆறுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படும்
- அமாவாசை தினத்தில் அசைவம் சமைக்கவே கூடாது
- ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது
ஆடி அமாவாசை நாளில் செய்யவேண்டியவை
- இந்த ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களையும் பெரியோர்களையும் வழிபட வேண்டும் இந்த நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- பூமிக்கு வரும் முன்னோர்களுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும்.
- இந்த நாளில் குல தெய்வ வழிபாடு சிறந்தது, மேலும், அம்மனை வழிபடுதல் இன்னும் சிறந்தது.
- இந்நாளில் முடிந்த அளவுக்கு தானம், தர்மம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
- மேலும், இந்த நாளில் எள்தானம், பசு தானம், அன்னதானம், ஆடைதானம் போன்ற தானங்களை வழங்க வேண்டும்.