இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 02 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி).
பூச நட்சத்திரம், கடக ராசி, பிரதமை திதி.
தனுசு ராசி – பூராட்டாதி நட்சத்திர காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
இவ்வாறாக, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல ஒரு நிறைவான நாளாக இருக்கப் போகிறது. மனம் விட்டு பேசி கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். பொருளாதார சிக்கல்களால் பணத்தேவை ஏற்படும். பயணங்கள் அனுகூல பலன் தரும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உடல் நலனில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்ப உறவுகளுக்கு இடையே மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காதீர்கள். சமயோசிதமாக செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம் திரும்பும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. மனம் போன போக்கில் செல்லாமல் திட்டமிட்டு செயல்பட்டால் நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு சிறு தடைகளை சந்தித்தாலும் நினைத்தது நடக்கும். எதிலும் குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியை நாடுவது பிரச்சனைகளை குறைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதனை படைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிலும் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படுவதால் மனம் மகிழ்ச்சியுற்று இருக்கும். போர்குணம் கொண்ட உங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாகும். திறமைக்கு உரிய பாராட்டுகள் பெறுவீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோதனைகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிலர் உங்களுடைய சினத்தை தூண்டி விடுவார்கள் எனவே நிதானத்தை கையாளுங்கள். கொண்ட கொள்கையில் இருந்து சற்று தளர்வதற்கு வாய்ப்பு உண்டு. சமூக அக்கறை அதிகரிக்கும். வீண் பகையை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. மனம் அலைபாய வாய்ப்பு உண்டு. அனாவசியமான இடங்களில் உதவி கேட்டு செல்லாதீர்கள். உழைப்பே உயர்வு என்பதை புரிந்து கொள்வீர்கள். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஈகை வளரும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விருத்தி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நினைத்ததை நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு சில இழப்புகள் ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகளும் வந்து சேரும் என்பதால் கவலை நீங்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நம்பிக்கைக்கு உரியவர்களை சந்தேகப்படாதீர்கள். மனக்கவலை நீங்க யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடங்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத வகையில் திருப்பங்கள் நிகழும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் பாச பிணைப்புகள் அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் உங்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைப்பது நல்லது. நினைத்த விஷயத்தில் காலதாமதத்தை சந்திப்பீர்கள். முக்கிய முடிவுகளை ஒத்தி போடுங்கள். அதீத உடல் உழைப்பினால் சுகவீனம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற திட்டம் தீட்டுவீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி பெருக கூடிய வாய்ப்பு உண்டு. சமூகத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும். வாகன ரீதியான விரயங்கள் வரக்கூடும் எச்சரிக்கை வேண்டும். எதையும் அவசரமாக செய்தால் முடிவு கிடைக்காது, பொறுமை இருந்தால் வெற்றி கிடைக்கும். மன பயம் நீங்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உறுதியான உள்ளம் கொண்டு விளங்குவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்கள் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உண்டு. எண்ணும் எண்ணத்தில் நேர்மறை ஆற்றல்களை செலுத்துங்கள். கடிவாளம் போட்ட குதிரை போல கவனத்தை சிதற விடாதீர்கள்.