இன்பத்தின் உச்சத்தை எட்டவுள்ள 5 ராசியினர் ! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 03 ஆம் திருநாள் புதன்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி).

அயினி நட்சத்திரம், கடக ராசி, திரிதியை திதி.

தனுசு ராசி, உத்தரம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த விடயங்களில் இழுபறி நிலை ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு மனக்குழப்பங்கள் உண்டாகும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். காரியங்களில் துணிந்து ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பொருள் வரவில் திருப்திகாரமான நிலை இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் வரவு செலவுகளில் கவனம் அவசியம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்கள் வெற்றி அடைவதில் தாமதம் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. சராசரியான பொருள் வரவு இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத நஷ்டம் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. பிறருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் வழியில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட நாளைய விருப்பங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை அடைவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் எதிலும் சிந்தித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்ப்பாலினத்தவர்களால் லாபம் ஏற்படும். விருந்து உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். எதிர்பாராத பொருளாதார வரவு இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் மனதில் பதட்டம் ஏற்படும். பணியிடங்களில் பிறருடன் பிரச்சினைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். சிலருக்கு கடன் வாங்கும் சூழல் உருவாகும். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். தொழில், வியாபாரங்கள் விரிவு பெறும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடங்களில் பணிச்சுமை கூடும். சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் வாழ்க்கை துணை உறவுகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். மனதில் வீண் கவலைகள் ஏற்படும். பொருளாதார வரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.