ராஜயோகத்திலுள்ள ராசியினர்: இனி இவர்களுக்கு பண அதிர்ஷ்டம் தான்..! இன்பத்தில் மூழ்கப்போகும் 4 ராசியினர் – இன்றைய ராசிபலன்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 04 ஆம் திருநாள் வியாழக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி).

ஆயினி நட்சத்திரம் அதன் பின் மக நட்சத்திரம், கடக ராசி, திரிதியை திதி.

உத்தரம் நட்சத்திரக் காரர்களுக்கு நாளைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் நிறைய குழப்பங்கள் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. மனம் போன போக்கில் செல்லாமல் திட்டமிட்டு செயல்படுங்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. பகல் நேரத்திற்கு பிறகு நல்ல செய்திகளை கேட்கலாம். கனவு காண்பதை விட்டுவிட்டு கூடுதல் உழைப்பை கொடுப்பது நன்மை தரும். தொலைதூரப் பிரயாணங்களின் பொழுது விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலன் தரும் நல்ல நாளாக அமைந்துள்ளது. இதுவரை உங்களை வாட்டி வதக்கி கொண்டிருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முன்பின் தெரியாதவர்களிடம் புலம்பாதீர்கள். சிலருக்கு இறை நம்பிக்கை அதிகரித்து காணப்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. மனதில் இருக்கக்கூடிய கவலைகள் மறையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய சொத்துக்கள் வாங்குவதில் சாதகப் பலன்களை பெறுவீர்கள். தாய் வழி உறவினர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. பெருமை கடலினும் பெரிது என்பது போல நிதானத்தை கையாளுவது நல்லது. எதிர்பாராத நபர்களின் அறிமுகத்தை பெறலாம். வழக்குகளில் சாதகமற்ற அமைப்பு என்பதால் துடுக்குடன் செயல்படாதீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் செய்ய வேண்டிய கடமைகளை அலட்சியம் செய்யாமல் சரிவர செய்வது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முக்கிய வாதங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மையுடன் செயல்பட வேண்டிய முக்கிய நாளாக இருக்கப் போகிறது. பிள்ளைகளுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்க வேண்டாம். வேலையில் மற்றவர்களுடைய உதவிகளை பெறுவீர்கள். எதிர்பாராத வீண் விரயங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைந்துள்ளது. காலையிலேயே நற்செய்திகளை பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் கவனமுடன் பேசுவது நல்லது. வெளியிடங்களில் உங்களுடைய முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மனதை அலைபாய விடாதீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்தது கை கூடி வரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து அக்கறையை கூட்டுவது நல்லது. முக்கிய நபர் ஒருவரை சந்திப்பீர்கள். எதிர்பாராத பிரயானங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. வழக்குகளில் சாதக பலன் பெறுவீர்கள். பிரயாணங்களில் மூலம் புதிய அனுபவங்களை பெற வாய்ப்பு உண்டு. தகுதியற்ற நபர்களுக்கு முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நெருங்கிய நண்பர்களுக்கு உதவிகளை புரிவீர்கள். பணி சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே ரகசியங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார ரீதியான பிரச்சினைகளை பொறுமையுடன் கையாளுவது நல்லது. எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குழப்பம் அதிகரித்து காணப்படும். மனதில் பட்டதை எல்லாம் பேசிவிட வேண்டாம். இடம், பொருள் பார்த்து முடிவெடுப்பது நல்லது. சமூக சிந்தனை அதிகரிக்கும். விட்டு சென்ற உறவு ஒன்று உங்களைத் தேடி வர வாய்ப்பு உண்டு. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அலட்சியம் செய்யாமல் கவனியுங்கள்.