ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. அதன் காரணமாக பிற கிரகங்களுடன் பல சேர்க்கைகளும் அதனால் ராஜயோகங்களும் உருவாகின்றன.
ஒரே ராசியில் இரு கிரகங்கள் சேர்வது யுதி என அழைக்கப்படுகின்றது. செல்வம், ஆடம்பரம், உலக இன்பம் மற்றும் செழுமை ஆகியவற்றைக் கொடுக்கும் சுக்கிரன், கடந்த வெள்ளிக்கிழமை(07) சூரியனின் ராசியான சிம்மத்தில் நுழைந்தார். இப்போது சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை நடந்துள்ளது.
செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை
ஏனெனில் சமீபத்தில் ஜூலை 1ஆம் திகதி செவ்வாய், சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால் அபரிமிதமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரன் சிம்மத்தில் நுழைந்துள்ள நிலையில், செவ்வாய் ஏற்கனவே அங்கு உள்ளார்.
இதனால் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகி லக்ன பாங்க யோகம் உருவாகிறது.
லக்ஷ்மி நாராயண யோகம்
சுக்கிரன் ஜூலை 23, 2023 அன்று காலை 6:00 மணிக்கு சிம்மத்தில் வக்ரமாகி, ஆகஸ்ட் 7 ஆம் திகதி காலை 11:30 வரை அதே வக்ர இயக்கத்தில் இருந்து, பின்னர் கடகத்திற்கு திரும்புவார். இந்த நேரத்தில் புதனும் சுக்கிரனும் ஒன்றாக வருவார்கள். இதனால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும்.
சுக்கிரன் செவ்வாய் மற்றும் புதனுடன் சேர்வதால் உருவாகும் ராஜயோகத்தின் தாக்கம் ஆனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரம் வலுவான பலன்களை அளிக்கும்.
துலாம்
சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சுபமாக இருக்கும். வருமான அதிகரிப்புடன், புதிய வருமான வழிகள் உருவாகும். புதிய வேலையைத் தொடங்குவதற்கு சாதகமான காலமாக இது இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பொருளாதார விடயங்களில் ஆதாயம் உண்டாகும்.
மேஷம்
சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் திருமண வாழ்க்கை மேம்படும். காதல் விவகாரங்களில் நெருக்கம் உண்டாகும். மாணவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் சாதகமான காலம். தொழில், வியாபாரத்தில் இலாபம் உண்டாகும். பழைய நோயிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டில் புதிய வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம்
சுக்கிரனின் இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் யோகத்தை அளிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். விருந்தினர்கள் வரலாம். வேலை செய்யும் தொழிலில் வெற்றியுடன் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். சொத்து, ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
கும்பம்
பண வரவு நன்றாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். கூட்டாண்மைப் பணி சாதகமாக அமையும். வணிகத் துறையில் இலாபம் பெறலாம். தற்செயலான பணவரவுக்கான அறிகுறிகள் உள்ளன. ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.