சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி என பல பெயர்ச்சிகளை நாம் சந்தித்து சுப, அசுப பலன்களையும் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
தற்போது சனி வக்ர பெயர்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது ஆரம்பித்திருக்கிறது குரு வக்ர பெயர்ச்சி. குரு பகவான் தற்போது மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார்.
இவரின் இந்த வக்ரப் பெயர்ச்சியானது செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி நிவர்த்தி அடையும். இந்தக் காலக்கட்டத்தில் புகழ், செழிப்பு, பெருமை என அதிஷ்டமான சுப பலன்களை நான்கு ராசிக்காரர்கள் பெறவுள்ளனர்.
மேஷம்
இந்த குருப்பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு நினைத்துப் பார்க்க கூட முடியாத அளவிற்கு அபரீதமான பலன்கள் வந்து சேரப் போகிறது. பொருளாதாரம் சிக்கல் இல்லாமல் இருக்கும். வீட்டில் பிரச்சினைகள் இல்லாமல் மகிழ்ச்சி நிலவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ரபெயர்ச்சியில் உங்களுக்கு தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும் ஒரு காலமாக மாறியிருக்கிறது. பணியிடங்களில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும், பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்பும் இருக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும். சொந்த தொழில் அமோ வெற்றி பெரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் வீடு தேடி வரும். உங்கள் ஆசைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கைக்கூடும். தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். பொருளாதாரம் சிறந்து விளங்கும்.
மீனம்
இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் உங்களுக்கு திடீர் பணவரவு, செல்வம், மகிழ்ச்சி என்பன எல்லாம் அமோகமாக இருக்கும். தொழில் செய்யும் இடங்களில் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் சிறந்து விளங்கும்.