ராஜயோகத்திலுள்ள ராசியினர்: இனி இவர்களுக்கு பண அதிர்ஷ்டம் தான்..! இன்பத்தில் மூழ்கப்போகும் 4 ராசியினர் – இன்றைய ராசிபலன்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 06 ஆம் திருநாள் சனிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி).

பூர நட்சத்திரம், சிம்ம ராசி, சதுர்த்தி திதி.

மகர ராசி – ஆயில்ய நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலன் தரும் நல்ல நாளாக இருக்கிறது. மற்றவர்களின் அறிவுரையை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஓய்வு தேவைப்படலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் ரகசியங்களை வெளியில் கொண்டு வராதீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். நெருங்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். உற்றார், உறவினர்களுக்கு உங்களுடைய உதவி தேவைப்படும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்துடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். முக்கிய குறிப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்து விடுவது நல்லது. வேலையில் மனதில் இருக்கக் கூடிய கேள்விகளை அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தயங்காதீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நல்ல எண்ணங்களுக்கு ஆதரவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்களை கண்டு கொள்ளாதீர்கள். சுற்றத்தாரின் நட்பு அதிகரிக்கும். பயணங்களில் அனுகூல பலன்களை பெற கூடும். ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கிறது. வங்கி சார்ந்த விஷயங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் வரக்கூடும் எனவே ஆடம்பர செலவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியம் செய்யாமல் உடனே கவனியுங்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் முயற்சிகளுக்கு நல்ல ஒரு பலன் கிடைக்கக் கூடிய நாளாக இருக்கப் போகிறது. தொலைதூர இடங்களிலிருந்து புதிய செய்திகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே சண்டைகள் வந்து மறையும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். திட்டமிட்ட காரியங்கள் சிதறாது. குடும்ப உறவுகளுக்கு இடையே மனஸ்தாபங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம் கவனம் வேண்டும். பயணங்களில் விவேகம் தேவை.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல நாளாக இருக்க போகிறது. திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடும். திருமண பேச்சு வார்த்தைகளில் திடீர் திருப்பங்கள் நன்மையாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வரவு காலதாமதம் ஆகலாம். சுற்றி இருப்பவர்களுடைய சூழ்ச்சிகளை இனம் கண்டு கொள்வீர்கள். மனம் தளராதீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய தொழில்நுட்ப விஷயங்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய வாய்ப்பு உண்டு. தேடி வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனக்குறைகளை பிடித்தவர்களிடம் கொட்டி தீருங்கள். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் காலதாமதம் செய்யுங்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர முயற்சி செய்வீர்கள். புதிய யுக்திகளை கையாளுவது சாதக பலன்களை கொடுக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அலட்சியமான மனப்போக்கு இழப்புகளை ஏற்படுத்தலாம் கவனம் வேண்டும். அசையும் மட்டும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் சாதகமற்ற பலன்கள் காணப்படுகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே கூடுதல் அக்கறை தேவை. உடல் நலன் மேம்படும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் புது உற்சாகம் தொற்றிக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் செய்திகளை கேட்கக்கூடும். புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். வேலையில் சமயோசித புத்தியுடன் செயல்படுவது ஏற்றத்தை தரும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.