பொதுவாக ஒருவரின் ஆளுமை, பண்பு அடிப்படையில் தான் அவர்களின் வாழ்க்கை அமையும்.
அந்த வகையில் உடல் சரியில்லாத காலத்திலும் சிலர் ஒற்றுமையாக இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் சில பொருத்தங்கள் தான்.
மேலும் தம்பதிகளின் குணங்கள் மட்டுமல்ல அவர்களின் ராசிக்களிலும் பொருத்தம் ரொம்ப அவசியம்.
அத்துடன் ராசிகளின் பொருத்தம் இல்லாதவர்கள் சேர்ந்தால் அவர்களும் சண்டை பிடித்து கொண்டே தான் இருப்பார்கள்.
அந்த வகையில் எந்த வகையிலும் பொருந்தாத 3 ராசி ஜோடிகள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
1. மேஷம் மற்றும் கடகம்
இதில் மேஷ ராசிக்காரர்கள் தன்னிச்சையாக செயற்படுபவர்கள். இதனை கடக ராசியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் சண்டை ஆரம்பித்து விடும்.
மேஷத்தின் நேரடி அணுகுமுறை தற்செயலாக கடகத்தின் உணர்வுகளை காயப்படுத்தலாம். தகவல் தொடர்பாடல் சரியாக இருக்காது. இதனால் இவர்களின் உறவில் விரிசல் விழுந்து விடும்.
2. ரிஷபம் மற்றும் கும்பம்
ரிஷப ராசி பிறந்தவர்கள் பாரம்பரியங்களை மதித்து அதன்படி வாழ்வார்கள். இதில் ஏதாவது மாறுதல் நடந்தால் வாழ்க்கை போராட்டமாகி விடும்.
ஆனால், கணிக்க முடியாத வகையில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களின் போக்கால் இவர்கள் சங்கடமாக உணரலாம். ஒருவரை ஒருவரால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருக்கும். இதனால் உறவிலும் ஆரோக்கியம் இருக்காது.
3. சிம்மம் மற்றும் விருச்சிகம்
தன்னுடைய துணையால் இவர்கள் விரக்தியடைவார்கள். இதனால் தற்கொலை கூட செய்து கொள்ளலாம். சிம்ம ராசிக்காரர்களுக்கு கவனம் மற்றும் பாராட்டுதலுக்கான வலுவான விருப்பம் உள்ளது. இதனால் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.
சுதந்திரத்திற்காக இருவரும் அடிக்கடி போராடுவார்கள். இவர்களின் உறவில் எப்போதும் இன்பம் இருக்காது.