மூன்று ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 07 ஆம் திருநாள் ஞாயிற்றுக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி).

உத்தர நட்சத்திரம், கன்னி ராசி, பஞ்சமிதிதி.

கும்ப ராசி – அவிட்ட நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி தரும் நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நினைத்ததை அடைவீர்கள். முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மையுடன் செயல்பட வேண்டிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து மறையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எளிதாக எதுவும் கிடைக்காது போராடித்தான் பெற வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பது நல்லது. திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பணி சார்ந்த ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்டது துலங்கக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை மேலும் பேசி பெரிதாக்காதீர்கள். அரசு வழி காரியங்களில் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமற்றதாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய நபர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுக்காக விட்டுக் கொடுப்பதில் கெட்டுப் போக மாட்டீர்கள். உழைப்பாளர்களின் தேவை அறிந்து செயல்படுவீர்கள். சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வாதங்கள் தவிர்ப்பது உத்தமமான நாளாக இருக்கப் போகிறது. குடும்ப பிரச்சினைகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. எவரையும் மட்டம் தட்டி பேசாதீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கமாவீர்கள். எதிர்பாராத பயணங்கள் நன்மை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுற்றி இருக்கும் எதிராளிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே சிறு மனக்கசப்புகள் உருவாக வாய்ப்பு உண்டு. எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். மனதில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களை ஒழித்து கட்டுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே ஆரோக்கியமான வாதங்களை செய்வது நல்லது. லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே அலட்சியம் காட்டாதீர்கள். மனைவியின் தேவை அறிந்து பூர்த்தி செய்வது நல்லது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். சிலர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முயற்சி செய்வீர்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் பட்டதை எல்லாம் சட்டென பேசி விடுவது நல்லதல்ல. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவது உசிதமானது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் குறையும். விடா முயற்சி உங்களுக்கு சில அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூட்டு முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தேவையில்லாத பகைமையை வளர்க்க வேண்டாம். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன்களை பெறுவீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குதூகலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பாராத நபர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் விரும்பிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். லாபம் அதிகரிக்கும்.