இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 08 ஆம் திருநாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி).
அஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, சஷ்டி திதி.
கும்ப ராசி – சதய நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். நினைத்த காரியத்தை விரைவாக முடிப்பது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வாகன பயணங்கள் பயத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் சில தாக்கங்கள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடுமையான முயற்சிகள் தன்னம்பிக்கையை அதிகரித்து கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது. எதிர்பார்த்த விஷயத்தில் பாதகமான நிலை இருக்கும். தடைகளைத் தாண்டி வெற்றி பெற நிதானம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களை தவறான எடை போடாதீர்கள். தீர விசாரிப்பதே மெய். ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். பிரச்சனைகளிலிருந்து விடுபட சமயோசிதமாக செயல்படுவது நல்லது. உடல் நலன் தேறும்.
<கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் முழுமூச்சாக செயல்படுவீர்கள். போராட்ட குணம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஆக்ரோஷமாக பேசாதீர்கள். எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்காதீர்கள். நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். புதிய நண்பர்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதளவில் நீங்கள் உடைந்து போக வாய்ப்புகள் உண்டு. உடன் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். காரணம் இன்றி வரக்கூடிய கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே தகராறுகள் வந்து மறையும். நிதானத்துடன் யோசித்தால் தீர்வு கிடைக்கும் எனவே அவசரப்படாதீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால்களை சந்திக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களால் முடியாது என்று நினைத்த காரியம் ஒன்று முடியும் என்று சாதித்து காட்டுவீர்கள். உற்ற நண்பர்களின் ஆதரவு உற்சாகத்தை தரும். பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உறுதியாக நின்று எதையும் சாதித்து காட்டுவீர்கள். சுப காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பயணங்களினால் அலைச்சல் ஏற்படலாம். கடமைகள் திடீரென அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பணத்தை இழக்க நேரலாம் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பிரச்சனைகளை கண்டு விலகி செல்லுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாதுகாப்பு இன்மை உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எல்லோரும் இருந்தாலும் எதுவும் இல்லாதது போல் ஒரு மனப்பான்மை இருக்கும். விட்டு சென்ற உறவுகள் தேடி வரும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். நிதானத்தை கடைபிடியுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி வாகை சூட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்ப்பது எதிர்பார்த்தபடி நடக்கும். கணவன் மனைவி இடையே பொறுப்புகள் கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். போராட்ட குணம் உள்ள உங்களுக்கு எண்ணியது ஈடேறும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் நீங்கள் சிலவற்றை சாதித்து காட்டுவீர்கள். உங்களுடைய நகைச்சுவை பேச்சால் மற்றவர்களை எளிதாக கவர்வீர்கள். பெரிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வயது தொடர்பான பாதைகள் வரக்கூடும் எனவே உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பாதைகள் பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். இழுபறியில் இருந்த காரியங்கள் வெற்றி அடையும். தற்பெருமை பேசாதீர்கள். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். பொது இடங்களில் கண்ணியமுடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சேகரித்த பணம் வீண் செலவாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் வரும். நிரந்தரம் இல்லாத வழியில் சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள். வீண் செலவுகளை குறைப்பது நல்லது.