திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்வின் அடுத்த அத்தியாயம் தான். இது அவருக்கு புது வாழ்க்கை, புது அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படி வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு சில சில பரிகாரங்களை செய்வதன் மூலம் திருமண தடைகளை நிவர்த்தி செய்யலாம். அதற்கு மாத்திரம் தன் வாழ்க்கையில் நல்ல துணை கிடைக்க வேண்டும் என்றும் சில பரிகாரங்களை செய்தால் நற்பலன்கள் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
திருமணமாகாத ஆணும், பெண்ணும் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் தூங்கவே கூடாது இவ்வாறு அந்த திசைகளில் தூங்கினால் திருமணம் தடை ஏற்படும் அல்லது நல்ல உறவு கிடைக்காது.
திருமணம் செய்தும் உறவுகளில் சிக்கல் இருந்தால் திருமணமாக தம்பதிகள் கறுப்பு நிற உடைகள் அணியவே கூடாது மேலும், வடக்கு பக்கம் பாதங்களை வைத்து உறங்க கூடாது.
திருமணமானவர்கள் கறுப்பு உடைகளுக்கு பதிலாக மஞ்சள் அல்லது சிவப்பு நிற உடைகளை அணிய வேண்டும்.
திருமணம் ஆகாதவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் திருமணம் நிச்சயம் ஆவதில் சிக்கல் இருக்கும். இதற்கு மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால் திருமணம் நிச்சயமாகும்.
திருமணம் பேச்சுக்களை பேசும் போது கிழக்கு திசையில் நின்றுதான் பேச வேண்டும். ஏனெனில் வேறு திசைகளில் நின்று பேசினால் செவ்வாயின் தோஷ நிலைகள் மாறி திருமண பிரச்சினைகள் ஏற்படும்.
திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்றுக்கும் அதிகமாக இருக்கும் ஜன்னல், கதவுகள் இருக்கும் வீட்டில் தான் உறங்க வேண்டும்.
வியாழ பகவானை வணங்கி வந்தால் திருமண பிரச்சினைகள், உறவுகளிடம் இருக்கும் தடை நீங்கி சந்தோசமாக வாழலாம்.