பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர்! ஆனால் கடக ராசியினருக்கு? இன்பத்தில் மூழ்கப்போகும் 5 ராசியினர் – இன்றைய ராசிபலன்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 09 ஆம் திருநாள் செவ்வாய்க்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி).

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, சப்தமி திதி.

பூராட்டாதி நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்திசாலித்தனமாக யோசிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல்கள் வரலாம். எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சுப காரியத்தில் அலைச்சல் ஏற்படும். பணி சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சாதகமான பலன்களை தரும். வருமான உயர்வு ஏற்படுவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மதிப்பு உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. எண்ணிய எண்ணங்கள் நேர்மறையாக இருத்தல் நன்மை தரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்ற இறக்கமாக இருக்கும். அரசு வழி காரியங்களில் காலதாமதம் ஆகலாம். பயணத்தில் கவனம் வேண்டும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மற்றவர்கள் உங்கள் உதவியை நாடுவதற்கு வாய்ப்பு உண்டு. செய்யும் செயலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதில் இருக்கக்கூடிய நீண்ட நாள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பேராசை பெரும் நஷ்டத்தை தரக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. வீட்டு தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் ரகசியங்களை தவிர்ப்பது நல்லது. பெரும் போராட்டத்திற்கு பிறகு நினைத்த வேலையை முடிக்க வேண்டி இருக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்மறையான சிந்தனைகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உண்டு. வருவது வரட்டும் என்று விட்டு விட்டு வேலையை பார்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளை பெரிதாக்காதீர்கள் சுமூகமாக முடிக்க பாருங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வேலையில் அலட்சியமான போக்கு இல்லாமல் அதிக நாட்டத்துடன் ஈடுபடுவது நல்லது. சொந்த பந்தங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நல்ல எண்ணங்கள் உங்களை வழி நடத்தக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதிர்வரும் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள். சுப காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தடைகளை தாண்டி முன்னேற்றம் அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வீண்பகையை வளர்க்க வேண்டாம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லி விடுங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தனிமை கொடுமையாக இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்வது நல்லது. கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வலுவாகும். நண்பர்கள் உதவி கரம் கிடைக்கும். பண விஷயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவைகள் யாவும் பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. அவசியமான கடன்களை தவிர்ப்பது நல்லது. சொத்து பிரச்சனைகள் வலுவாகும். எதிலும் சுயநலமாக சிந்திக்காமல் பொது நலமுடன் இருப்பது நல்லது. புது இடங்களில் அமைதி காப்பது நல்லது.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. வெளியிடங்களில் இருந்து உங்களுக்கு புதிய செய்திகள் கிடைக்கும். திடீர் பயணங்களை சிந்தித்து மேற்கொள்வது நல்லது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உத்தமம். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.