இன்று சிம்ம ராசிக்கு புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளார். இதனையடுத்து, புதன்பகவான் சிம்மராசியில் அடுத்த 67 நாட்களுக்கு தங்க இருக்கிறார்.
இதனால் எந்தெந்த ராசிக்காரர்களெல்லாம் ராஜயோகம் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம் –
மேஷம்
இன்று சிம்ம ராசிக்கு புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு எல்லாமே சாதகமாக அமையப்போகிறது. உங்கள் பல நன்மைகள் தேடி வரப்போகிறது. பணி செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரப்போகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷபம்
இன்று சிம்ம ராசிக்கு புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பேச்சில் நல்ல தெளிவு பிறக்கும். அறிவு சார்ந்த விஷயங்களில் திறம்பட செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
மிதுனம்
இன்று சிம்ம ராசிக்கு புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது சிறந்தது. எடுத்த காரியங்களை சிறந்த முறையில் முடிப்பீர்கள். திடீரென பயணம் மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்று சிம்ம ராசிக்கு புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுடைய நிதி நிலை சீராக இருக்கும். புதன் பகவான் உங்கள் ராசியில் பெயர்ச்சி செய்துள்ளதால், நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். பல கஷ்டங்கள் உங்களை தேடி வந்தாலும், அதிலிருந்து மீண்டு வெற்றி பெற்றுவிடுவீர்கள்.
துலாம்
இன்று சிம்மராசியில் புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளதால், துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரப்போகிறது. முதலீட்டில் நல்ல வருமானம் பெறுவீர்கள். கலை மற்றும் கலாச்சாரங்களில் உங்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். உங்களுடைய சிந்தனை மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று சிம்மராசியில் புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளதால், விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த காரியங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையப்போகிறது. நீங்கள் பணி செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் அடையப்போகிறீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் நல்ல பெறுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.
தனுசு
இன்று சிம்மராசியில் புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் பண வரவு அதிகரிக்க உள்ளது. இதனால், நீங்கள் வெளிநாடு செல்லக்கூட நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பணி செய்யும் இடத்தில் நல்ல முறையில் கவனம் செலுத்தினால் பதவி உயர்வு பெறுவீர்கள். கடின உழைப்பு வீண் போகாது. கூட்டு வியாபாரம் சிறப்பாக அமையும்.
கும்பம்
இன்று சிம்மராசியில் புதன் பகவான் பெயர்ச்சி செய்துள்ளதால், கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு ஏழரை சனி நடக்கூடிய காலக்கட்டத்தில் லட்சுமி நாராயண யோகத்தால் உங்களுக்கு ஆதரவு பெருகும். காதல் திருமணம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.