மூன்று ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 10 ஆம் நாள் புதன்கிழமை (2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி).

உத்தர நட்சத்திரம், கன்னி ராசி, பஞ்சமிதிதி.

கும்ப ராசி – அவிட்ட நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதமான பொழுதாக அமைய இருக்கிறது. மனதில் இருக்கும் சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே முக்கியத்துவத்தை அதிகப்படுத்துங்கள். வெளியிடங்களில் காரணம் இன்றி கோபப்படாதீர்கள். உடல் நலத்தையும் கவனியுங்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறையான சிந்தனைகளை அதிகரித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு தடை இல்லாமல் இருக்கும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்து கொள்வீர்கள். முடியாது என்று சொன்னவர்கள் முன்பு அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வெளியிடங்களில் நேர்மையாக இருப்பது நல்லது. குறுக்கு வழி ஆபத்தை தரும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. தேவையில்லாத பள்ளிகள் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு எச்சரிக்கையுடன் இருங்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தேவையற்ற பேச்சால் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும் எனவே முடிந்தவரை மௌனம் உடன் இருப்பது நன்மை தரும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய தருணங்களை நினைத்துப் பார்க்கக்கூடிய வாய்ப்பு உண்டு. மனம் பல வகைகளில் அலைபாயும். தனிமையை வேண்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் சுமூக தீர்வு காணலாம். வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமை நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமிதம் கொள்வீர்கள். பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். சவால் நிறைந்த வேலைகளையும் அசால்டாக செய்து காட்டுவீர்கள். உடல் நலத்தை கவனியுங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்கவலை நீங்கி உற்சாகம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததற்கு எதிர் மாறாக தான் எல்லாமே நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தூக்கி போடுங்கள். சொந்த, பந்தங்களுக்கு இடையே சில மனஸ்தாபங்கள் வர வாய்ப்பு உண்டு. உணவு கட்டுப்பாடு தேவை.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் போன போக்கில் செல்லாமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் எல்லாவற்றையும் உளறி கொட்டாதீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள். வேலையில் துறை சார் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ண ஓட்டத்தில் மாற்றங்களை உணர்வீர்கள். எது சரி? எது தவறு? என்பதை சிந்திக்க துவங்குவீர்கள். எடுக்கும் முடிவுகளில் இருந்து பின் வாங்க வேண்டாம். சுபகாரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் நினைத்த வெற்றியை காணலாம். கேட்ட உதவிகளை செய்யுங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில இடங்களில் அவமானப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதீர்கள். புதிய வேலை வாய்ப்புகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உண்டு. எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழும். பொறுத்திருந்தால் பூமியையும் ஆளலாம் என்பதை மறக்காதீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வார்த்தைகளில் கவனம் வேண்டும். குடும்ப உறவுகளுக்கு இடையே அனுசரித்து செல்லுங்கள். அண்டை அயலருடன் ஏற்பட்ட நட்பால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். முக்கிய பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்காமல் நீங்களே பார்ப்பது நல்லது.