கனடாவில் அடைக்கலம் கோர செலவின்றி புதிய வழி

கனடாவில் அடைக்கலம் கோருவதற்கு சிலர் தமது பணத்தை செலவழிக்காமல் புதிய உத்தியை கையாண்டு வருகின்றனர்.

இதன்படி தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி கனடாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் பலர் அங்கு குடியேறும் வகையில் அந்நாட்டிடம் அடைக்கலம் கோரும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம்

இவ்வாறு சர்வதேச எயிட்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா வருகை தந்தவர்களில் 15 வீதமானவர்கள் புகலிடம் வழங்குமாறு கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.

எயிட்ஸ் மாநாட்டில் பங்கேற்ற 251 வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி லண்டன் சென்ற விளையாட்டு வீரர்கள் சிலர் அந்நாட்டில் தலைமறைவானதும் குறிப்பிடத்தக்கது.