தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 12 ஆம் திருநாள் வெள்ளிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி).

அனுச நட்சத்திரம், விருச்சிக ராசி, தசமி திதி.

மேஷ ராசி – பரணி நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வுடன் காணக் கூடிய சாதகமற்ற நாளாக இருக்கிறது. மனதில் இனம் புரியாத ஏதோ ஒரு பயம் உங்களை ஆழ்த்திக் கொண்டிருக்கும். கணவன் மனைவிக்குள் எந்த ஒரு ரகசியங்களுக்கும் இடம் தராதீர்கள். பொருளாதாரம் ஏற்றும் காண புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. முன்கோபத்தால் தேவையற்ற இழப்புகளை சந்திக்கலாம் கவனம் வேண்டும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வரும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணம் உயர்ந்ததாக இருக்கக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு கேட்ட உதவிகளை செய்வீர்கள். உங்களுடைய நண்பர்கள் வட்டாரத்தில் மகிழ்ச்சியாக செய்திகளை கேட்கக்கூடும். வேலை தேடி அலைபவர்களுக்கு பிடித்த வேலை அமையும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள். பொருளாதாரம் உயர புதிய யுக்திகளை கையாளுகிறிர்கள். உங்கள் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களை அவமதிக்காதீர்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. குடும்ப விவகாரங்களில் அலட்சியம் இல்லாமல் உடனடி தீர்வு காண்பது நல்லது. சுப காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். விட்டு சென்றவர்களை பற்றி நினைத்து கொண்டு இருக்காதீர்கள். ஆரோக்கியத்தில் மந்த நிலை காணப்படும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சுற்றி இருக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகளை எளிதாக முறியடித்து வெற்றி காணக்கூடிய வாய்ப்பு உண்டு. குடும்ப உறவுகளுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. காத்திருந்த ஒப்பந்தங்கள் கைக்கூடி வரும் யோகம் உண்டு. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடைய எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஒன்றுக்கு பலமுறை சிந்தியுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொல் புத்தியை விட சுயபுத்தியை பயன்படுத்துவது நல்லது. உடலுக்கு ஒவ்வாதவற்றை தவிருங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கிறது. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். பொருளாதார உயர்வு தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்வது நல்லது. செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்க வாய்ப்பு உண்டு.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. அனாவசிய பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுங்கள். திடீர் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு வரும். பொதுக் காரியங்களில் ஈடுபட உள்ளவர்களுக்கு மனதிருப்தி ஏற்படும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பீர்கள். நல்லது, கெட்டது அறிந்து செயல்படுவீர்கள். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன்கள் உண்டு. புதிய அறிமுகத்தால் அனுகூலமான பலன்களை காணலாம்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வத்துடன் பங்கேற்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே ஒளிவு மறைவை தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் செய்யும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவுகளும் வரும்.