குறுகிய காலத்திலேயே பணக்காரராக மாறப்போகும் அதிஷ்ட யோகம் கொண்ட 4 ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

ஜாதகத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். சில ராசிக்காரர்கள் குறுகிய காலத்திலேயே வெற்றி பெற்று பணக்காரர்களாக மாறிவிடுவார்கள். இன்னும் சிலர் பணப்பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள்.

எந்த ராசிக்காரர்கள் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக மாறுவார்கள் என்று பார்ப்போம் –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் என்றால், இவர்கள் பிறப்பால் பணக்காரராக இருக்க மாட்டாங்க. ஆனால், இவர்கள் வளர, வளர பணம் செழிக்கும். இவர்கள் அதிர்ஷ்டக்காரர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சொந்தமாக தான் உழைத்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆடம்பாரமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.

ரிஷபம்
சுக்கிரன் அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்றால், பணத்திற்கு பஞ்சம் இருக்காது. இவர்கள் சுலபமாக பணத்தை சம்பாதித்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.

எந்த ஒரு வாய்ப்பு வந்தாலும் அதை விட்டுவிட மாட்டார்கள். எதையாவது செய்ய வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் 2-வது திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்மராசிக்காரர்களே, நீங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்றால் அனைவர் மத்தியிலும் தனி அடையாளமாக தெரிவீர்கள். கடின உழைப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். இளம் வயதில் நீங்கள் பணத்தை வேகமாக சம்பாதித்து விடுவீர்கள்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்றால் ரொம்ப ரகசியக்காரர்களாக இருப்பீர்கள். நீங்கள் பெரிய ஆளாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பீர்கள்.

அந்த அளவிற்கு ஆற்றலும், வேகமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் அடிப்படையிலேயே ராஜயோகம் இருப்பதால் குறுகிய காரத்தில் மிகப் பெரிய பணக்காரர்களாக மாறிவிடுவீர்கள். பெரிய தொகையையும் சம்பாதித்து விடுவீர்கள்.