பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர்! ஆனால் கடக ராசியினருக்கு? இன்பத்தில் மூழ்கப்போகும் 5 ராசியினர் – இன்றைய ராசிபலன்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை (2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி).

கேட்டை நட்சத்திரம், விருட்சிக ராசி, ஏகாதசி திதி

மேஷ ராசி – கிருத்திகை நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தாண்டிய நல்ல ஒரு முன்னேற்ற பாதை கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. புதிய விஷயங்களில் தைரியமாக ஈடுபடலாம். கணக்கு வழக்குகளில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முக்கிய பொறுப்புகளில் நெருங்கியவர்களாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை அடையக்கூடிய நல்ல பலன்கள் நிறைந்த அமைப்பாக இருக்கிறது. தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு. பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதக பலன்கள் உண்டு. தொழில் ரீதியான அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் உண்டு.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். பொறுமை கடலினும் பெரிது என்பதை நினைத்து சில விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இரக்க சுபாவத்தால் நன்மை அடையலாம்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்பம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தெளிவு தேவை. எதிர்பார்த்த லாபத்தை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. பண விஷயத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். உங்களுடைய கோபத்தை சிலர் சீண்டுவார்கள் சாந்தமாக இருப்பது நல்லது.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததற்கு நேர் மாறாக நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. யார் என்ன சொன்னாலும் அதில் இருக்கக்கூடிய உண்மை தன்மையை அறிவது நல்லது. தேவையற்ற நபர்களிடம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தொட்ட காரியங்களில் வெற்றி பெற திட்டமிடுதல் அவசியம் ஆகும். ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகவீனம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மனதளவில் பலவீனமாக இருப்பீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தள்ளி போடுங்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிரயாணங்களில் மூலம் புதிய அனுபவங்களை சிலர் பெறுவார்கள். ஈகை குணத்துடன் இருப்பது நல்லது.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பயம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை அடைய புத்தியை தீட்டுங்கள். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். நீண்ட நாள் கழித்து முக்கிய நபர்களை வாய்ப்புகளை பெறுவீர்கள். உடல்நலத்தில் அக்கறை வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிறைவான நாளாக இருக்க போகிறது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் எனினும் முக்கிய செலவுகளை தவிர ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை சுற்றி இருக்கக் கூடியவர்களுடன் ஆரோக்கியமான போட்டிகள் நிகழும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடங்கல் நீங்கி எதிர்பார்த்தது பலிக்கக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப நபர்களுக்கு விட்டுக் கொடுங்கள். கண்முன் தெரியாமல் செலவு செய்யாதீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்படக்கூடிய தடைகளை கண்டு மனம் தளராதீர்கள். அரசு வழி காரியங்களை சாதக பலன் பெறுவீர்கள். பேச்சில் இனிமை வேண்டும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுதல் பொறுப்புகளை ஏற்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே அலட்சியத்தை தவிர்த்து அக்கறையை கூட்டுவது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். முக்கிய பொறுப்புகளை கவனமுடன் கையாளுவது நல்லது. சிலருக்கு மறதியால் பிரச்சனை வரலாம்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கிறது. உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள். நேர்மையும், நாணயமும் உங்களுடைய பக்க பலமாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களால் சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய முக்கிய நாளாக இருக்கிறது. வீண் பழிகளை ஏற்க வேண்டிய அமைப்பு உள்ளது எச்சரிக்கை தேவை. அனாவசியமான விஷயங்களில் நீங்களாகவே மூக்கை நுழைக்காதீர்கள். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசிக்கொள்வது நல்லது. மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.