ஆகஸ்ட் மாதத்தில் 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடக்க உள்ளதாக ஜோதிடங்கள் கூறுகின்றன. அதன்படி இந்த மாதத்தில் சுக்கிரன் கடக ராசிக்கும், சூரியன், புதன் சிம்மத்திற்கும் பெயர்ச்சி நடக்கிறது.
அது மட்டுமல்லாது செவ்வாய் கன்னி ராசிக்கு மாறுதல் என கிரக மாற்றம் நடக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த மாதத்தில் சனி, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளனர்.
மேஷம்
மேஷ ராசியிலேயே குரு அமர்ந்திருப்பது மிக சாதகமானது. சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பணவரவு சிறிது தடைப்பட்டாலும், அதிக பண வரவு இருக்கும். பூர்வீக சொத்து வந்து சேர வாய்ப்புள்ளது.
வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். கடின உழைப்பின் பலனை அடைந்திடுவீர்கள். வருவாய் உயரும். தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றமும், லாபமும் இருக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. உடல் நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் நிதி விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். முயற்சிகளில் சற்று பின்னடைவு இருந்தாலும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பீர்கள்.
திருமண உறவில் மகிழ்ச்சி இருக்கும். துணையின் ஆதரவு கிடைக்கும்.சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. குடும்பத்திற்காக செலவு அதிகம் செய்ய நேரிடும். அதனால் செலவு விஷயத்தில் கவனம் தேவை.
பங்கு சந்தை விஷயத்தில் நிதானம், எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் அனுசரித்துச் சென்றால் நல்ல ஆதரவும், மேன்மையும் பெற்றிடுவீர்கள்
சிலருக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதில் அனுகூல பலன் கிடைக்கும். தொழிலில் புதிய யோசனைகள், புதிய இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். முதலீடுகள் விஷயத்தில் வல்லுநர்களின் ஆலோசனை கேட்டு நடக்கவும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு லாபங்கள் அதிகரிக்கக்கூடிய மாதம். உங்களுக்கு வேலை, தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெற்றிடுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும். நிதி அம்சம் சிறப்பாக இருக்கும்.
குடும்ப தேவைகளை நிறைவேற்ற முடியும். காதல் வாழ்க்கை, திருமணத்திற்கு கொண்டு செல்ல முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய மாதம். உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும்.
வணிகத்தில் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். உடல் நலம் பிரச்னை தொடர்பாக செலவு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் நல்ல பெயரும், அங்கீகாரமும் கிடைக்கும். சக ஊழியர்களைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் சார்ந்த விஷயங்களில் இந்த மாதத்தில் லாபம் மற்றும் வருமானம் நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு சாதகமான மாதமாக இருக்கும். எந்த துறையில் இருந்தாலும் அதில் ஞானத்தையும், அனுபவத்தையும் பெற்றிடுவீர்கள். சொத்து, வாகனம் சார்ந்த விஷயங்களில் சிரமம் உண்டாகலாம். குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். குடும்பத்துடன் பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
நிதிநிலை மேம்படுவதற்கான வாய்ப்புள்ளது. திடீர் வருமானம் சிக்கலைத் தீர்க்கும். உத்தியோகத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். நேர்மறையாகச் சிந்திப்பீர்கள்.
தொழிலில் புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய அதிகாரம் கிடைக்கும். எதிரிகளை சிறப்பாக வெற்றி கொள்வீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் அதிர்ஷ்டத்தைத் தருவதாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட முடியும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மீனம்
மீன ராசிக்கு மிக சிறப்பான மாதமாக அமையப்போகிறது. ஆரோக்கியம் சற்று பாதிப்பு இருந்தாலும் மற்ற விஷயங்கள் நன்மைகளைத் தரும். காதல் விஷயங்களில் சவால்களையும், தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
நிதி நிலை மேன்மை உண்டாகும். பண வரவுக்கான நிதி ஆதாரங்கள் அதிகரிக்கும். மனைவி மூலம் அதிர்ஷ்டம் அடிக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும்.
பணியிடத்தில் எதிரிகளை கவனமாக கையாளவும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் சார்ந்த விஷயங்களில் வெற்றியும் போட்டியாளர்களைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களுடன் பிரச்னை ஏற்படலாம். கவனம் தேவை.