ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
இதன்படி, இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி)
இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்க போகிறது. கணவன் மனைவிக்குள் ஈகோவை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்துடன் பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பொருளாதார ரீதியான உயர்வு திருப்திகரமாக இருக்கும். உடலுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் சற்று ஓய்வு கொடுப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய ஆளுமை திறனும் சவால் நிறைந்ததாக அமைய இருக்கிறது. குடும்ப ஒற்றுமைக்கு நீங்கள் அனுசரித்து செல்ல வேண்டும். சமூகத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. காரணம் இல்லாமல் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். குடும்ப பொறுப்புகள் சற்று அதிகரிக்கும். பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். பிறர் விஷயங்களில் அனாவசியமாக தலையிடாதீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று பேச அது வேறொன்றாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு உண்டு. வாயை கட்டுப்படுத்தினால் நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் செய்யும் செயலுக்கும் பலன்களுக்கும் சம்பந்தம் இருக்காது. பொருளாதார உயர்வு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்குவது நல்லது. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வசதி வாய்ப்புகள் பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிலவற்றை உங்களால் செய்ய முடியாமல் போகலாம். கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை குறைக்காதீர்கள். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு தவறான முடிவுகளை எடுத்து விடாதீர்கள். உடல் நலன் தேறும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்ப நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தயராத உழைப்பால் பாடுபட்ட உங்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். செய்யும் செயல்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர வாய்ப்பு உண்டு விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. வாகன பயணம் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். பண விவகாரங்களில் இருந்து வந்த வில்லங்கம் மறையும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இனம் புரியாத குழப்பம் நீடித்து காணப்படும். வருவது வரட்டும் என்று விட்டுவிடுங்கள். ஆசைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்வீர்கள். முக்கிய இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்வதால் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய முதலீடுகள் செய்யும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி காணப்படும். முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிவட்டார நட்பு வட்டம் விரிவடையும். யோசிக்காமல் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவை இல்லாமல் பொய் உரைப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். பொருளாதாரம் சீராக இருக்கும். தேவையற்ற வீண் விரயங்களை தவிர்த்தால் நிம்மதி கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவின்றி பேசிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.