மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 15 ஆம் திருநாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி).
பூராட நட்சத்திரம், தனுசு ராசி, திரயோதசி திதி.
ரிஷப ராசி – மிருக சீரிச மற்றும் கோஹினி நட்சத்திரக் காரர்களுக்கு நாளைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். மனதில் இனம் புரியாத பயம் நீங்கும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். பண ரீதியான விஷயத்தில் எளிதாக எவரையும் நம்பி விடாதீர்கள். மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு விஷயங்களுக்காக மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்கிற மனோபாவம் உங்களை நேர்மறையாக சிந்திக்க செய்யும். முடிவை எடுத்த பின்பு பின்வாங்காதீர்கள். மற்றவர்களுடைய பிரச்சினைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சொந்த பந்தங்களால் மகிழ்வுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத நபர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. பயணத்தில் கவனம் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை ஏதோ ஒன்று காப்பது போல உணர்வு ஏற்படும். தவறான பாதையில் செல்லாதீர்கள். மனதை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது நல்லது. தொழில் விஷயத்தில் அலட்சியம் செய்ய வேண்டாம். எடுக்கும் முடிவுகள் அனைவருக்கும் சாதகமாக இருப்பது நல்லது. பொன், பொருள் சேர வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழுப்பறியில் இருந்து வந்த பணிகள் விரைவாக முடிவடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன ரீதியான விடயங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. வெளி வட்டார நட்பில் ரகசியங்களை உளற வேண்டாம். புதிய முயற்சிகளில் இருந்து சற்று தள்ளி இருங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியங்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சந்தேகங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். தாம் தூம் என்று செலவு செய்யாதீர்கள். பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அமைதி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இன்றுடன் சில பொறுப்புகள் உங்களுக்கு குறையும் வாய்ப்பு உண்டு. வெளியிடங்களில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாமல் கூடுதல் அக்கறை கொள்வது உத்தமம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த இடையூறுகள் நீங்கி நற்பலன்கள் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வெளியிடங்களில் அனுபவ அறிவை வெளிப்படுத்துவீர்கள். எதையும் சாதிக்கும் திறன் வளரும். சுற்றி இருக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகளை எளிதாக முறியடித்து வெற்றி காணக்கூடிய வாய்ப்பு உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. முடியாது என்று சொன்ன காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். பணி சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு இதனால் டென்ஷன் இருக்கும். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. வெளியிடங்களில் சமயோசித புத்தியுடன் செயல்படுவீர்கள். வீண் பழி மறைய வாய்ப்பு உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். உங்களுடைய நீண்ட நாள் முயற்சிகளுக்கு நேர்மறையான விமர்சனங்கள் வரும். தடைபட்ட காரியம் விரைவில் நிறைவேறும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும் நல்ல நாளாக இருக்கிறது. பிள்ளைகளால் அணுகலமான பலன்கள் உண்டு. எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிரயாணங்களால் ஆதாயம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுக்கு பிடித்தவர்களுக்காக சிலவற்றை அனுசரித்து செல்வீர்கள். பெற்றோர்களுடைய நன்மதிப்பை பெறுவீர்கள். வெளி வட்டாரங்களில் பேசும் பொழுது உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவீர்கள். சமுதாய அக்கறை அதிகரித்து காணப்படும்.