மாத ஆரம்பத்திலேயே அதிர்ஷ்ட யோகம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்…!

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 16 ஆம் திருநாள் செவ்வாய்க்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி).

உத்தராட நட்சத்திரம், மகர ராசி, பௌர்ணமி திதி.

மிதுன ராசி – மிருக சீரிச நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் கடமைகளில் இருந்து விலகாமல் இருப்பது நன்மை தரும். பொறுப்பில்லாமல் செயல்பட வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார முன்னேற்றம் குறித்த பயம் நீடிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவீர்கள். புத்தம் புது பொலிவுடன் உங்களுடைய முகம் ஜொலிக்கும். இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி இருக்கும். பண ரீதியான விஷயத்தில் மற்றவர்களை எளிதாக நம்பாதீர்கள். முக்கிய வேலைகளில் மறதி ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடுமையான முயற்சிகள் பலிதமாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய நயமான பேச்சால் மற்றவர்களை எளிதாக ஈர்த்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கிய முடிவுகளில் பெற்றோர்களுடைய ஆசீர்வாதத்தை வாங்கிக் கொள்வது நல்லது. கொடுத்து விட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த லாபம் அடைவதில் இருந்து வந்த இன்னல்கள் மறையும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனிவான பேச்சால் எதையும் சாதிக்கக் கூடிய வல்லமை உங்களுக்கு கிடைக்கும் நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் புரிதலை மேம்படுத்துவது உத்தமம். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் சாதக பலன்கள் உண்டாகும். எதிர்பாராத பயணங்கள் நன்மை தரும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த விஷயங்களில் மூன்றாம் மனிதர்களை தலையிட விடாதீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முடிவுகளில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய விஷயத்தில் இருந்து ஓய்வு கிடைக்கும். வெளியிடங்களில் மற்றவர்களுடைய அனாவசியமான விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். எதிர்பாராத திடீர் செய்திகள் கேட்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகளினால் பெருமை ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடல் நலத்தை கவனிக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. சிறு சிறு பிரச்சனைகளையும் புறக்கணிக்காதீர்கள். திட்டமிடாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்யாதீர்கள். கூடுதல் பணிச்சுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரயானங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுதல் நலம் தரும். தேவை இல்லாமல் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் வீண் விரயங்கள் வரக்கூடும். உடல் நலன் தேறும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. பொருளாதாரம் முன்னேற்றம் உயரும். கணவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வெளியிடங்களில் நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனம் புரியாத குழப்பம் இருக்கும். செய்யும் செயலில் நிதானம் தேவை. போட்டிகளை ஆரோக்கியமாக அணுகுவது நல்லது. தேவையில்லாத பகைமையை வளர்க்க வேண்டாம். சுற்றி உள்ளவர்களின் முகத்திரையை கிழிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை சற்று தள்ளி போடுவது நல்லது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து காட்டுவீர்கள். பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.